அண்ணாத்த படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பினார் ரஜினிகாந்த் : அவருக்கு கிடைத்த வரவேற்பை பாருங்க!

rajinikanth returned to chennai after finishing his portions in annathe movie

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் “அண்ணாத்த” படத்தின் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்துவிட்டு நேற்று சென்னை திரும்பினார். சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் படம் “அண்ணாத்த”. ரஜினிகாந்த், மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, குஷ்பூ உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார்.

படப்பிடிப்பு தொடர்ச்சியாக ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றுவந்தது. படக்குழுவில் உள்ள 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு ரஜினிகாந்த் அவர்களுக்கும் உடல்நிலையில் சற்று தோய்வு ஏற்பட்டது. படக்குழுவில் இருந்த அனைவருக்கும் நெகடிவ் ரிசல்ட் வந்தது. ஆனால், ரஜினிக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஐதராபாத்திலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்பு சென்னை திரும்பிய அவர் சில நாட்கள் ஓய்வு எடுத்துவந்தார்.  சென்னை திரும்பிய அவர் காரில் இருந்து இறங்கும்போதே சற்று சோர்வாக காணப்பட்டார்.

பிறகு, இவை அனைத்தும் சரிசெய்த பிறகு உரிய பாதுகாப்புடன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டது. படப்பிடிப்பில் அனைவருக்கும் உரிய பரிசோதனை செய்யப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ரஜினிகாந்தின் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டன. ரஜினியும் தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.  சென்னை வந்த அவர் நேராக போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்றார்.

வாசலில் காத்திருந்த அவரது மனைவி ரஜினிக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றார். ஆனால் இம்முறை ரஜினி சற்றே சுறுசுறுப்பாக காணப்பட்டார். காரில் இருந்து இறங்கியவுடன் வெளியில் காத்திருந்த ரசிகர்கள் மற்றும் ஊடக நண்பர்களை பார்த்து வேகமாக கையசைத்து விட்டு உள்ளே சென்றார்.  இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க:

சிம்புவின் மாநாடு படத்தின்….ரிலீஸ் ஒத்திவைப்பு : தயாரிப்பாளர் உருக்கம்.

 

 

 

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top