“என் பேருந்து ஓட்டுனருக்கு நன்றி” : தாதா சாஹேப் பால்கே விருது பெறும் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி.

rajinikanth Receving dadasaheb phalke award
இந்திய திரைப்பட துறையின் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அறிவிப்பு. ரஜினியின் 50 ஆண்டுகால கலை சேவையை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் கே.பாலச்சந்தர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவர் ரஜினிகாந்த். கடந்த 1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு, தனது அயராத உழைப்பால் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.
rajinikanth award
மூன்று தலைமுறைகளை கடந்து முடிசூடா மன்னனாக திகழ்கிறார். தனக்கென ஓர் ராஜ்யத்தை உருவாக்கி அதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார். முன்னதாக, 2000-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2016-ஆம் ஆண்டு பத்மவிபூஷன் விருதும் பெற்றுள்ளார். இந்நிலையில், இன்று (1/04/2021) மத்திய அரசின் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருதை இந்தாண்டு ரஜினிகாந்துக்கு வழங்கியுள்ளது.
இதற்கு, பல்வேறு திரைத்துறை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ரஜினிகாந்த் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில், “இந்திய திரையுலகின் உயரிய தாதா சாஹேப் பால்கே விருதை அளித்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார்”. விருது வழங்கிய மத்திய அரசுக்கும், பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
rajinikanth
மேலும், தனக்குள் இருந்த நடிப்பு திறமையை கண்டுபிடித்து ஊக்குவித்த தன் பேருந்து ஓட்டுநர், நண்பர் ராஜ் பகதூருக்கு நன்றி தெரிவித்தார். பிறகு, தன சகோதரர் திரு.சத்யநாராயணா ராவ் கெய்க்வாட் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். குருநாதர் திரு.கே.பாலச்சந்தர் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், தன்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழக மக்கள், ரசிகர்கள், ஊடகங்கள்,தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள்,  திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
"என் பேருந்து ஓட்டுனருக்கு நன்றி" : தாதா சாஹேப் பால்கே விருது பெறும் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி.
மேலும், தனக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி திரு.பழனிசாமி, துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
திரு.மு.க.ஸ்டாலின், நண்பர் கமல் ஹாசன், நலம் விரும்பிகளுக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது பெற்றதை ரசிகர்களும், தமிழக மக்களும் கொண்டாடி வருகின்றனர்.

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top