அண்ணாத்த படத்தின் FIRST LOOK எப்போது தெரியுமா? வெளியான சுவாரஸ்ய தகவல்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சதிஷ், பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்ட மிகப்பெரும் நடிகர் பட்டாளமே நடிக்கும் படம் அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதெராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்றது. படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் படக்குழுவில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து படப்பிடிப்பு நின்றுபோனது.

அண்ணாத்த படத்தின் FIRST LOOK எப்போது தெரியுமா? வெளியான சுவாரஸ்ய தகவல்.

ரஜினிகாந்திற்கு கொரோனா பாதிப்பு இல்லையென்றாலும்  உடல்நிலை சற்று மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், சென்னைக்கு திரும்பிய ரஜினி ஓய்வு எடுத்தார்.  அதன் பிறகு, பாதுகாப்பு காரணங்கள் கருதி சென்னையிலேயே பிரத்யேகமாக அரங்கு அமைத்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அண்ணாத்த படம் வருகிற நவம்பர் 4-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Annaatthe release date

தற்போது இதன் படப்பிடிப்பு எப்போது நிறைவடையும் என்ற தகவல்  வெளியாகியுள்ளது. மே 10 -ஆம் தேதி படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடையும் என்றும் ஜூன் மாதத்தில் படத்தின் FIRST LOOK வெளியாகும் என்று கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தையும் சூர்யா நடிக்கும் சூர்யா 40 -யையும் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் படிக்க:

 

 

கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து…மீண்டும் இணையும்  தனுஷ் – மாரிசெல்வராஜ்.

 

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top