திடீர் ஞான உதயம்…..தேர்தல் வருத்துல!

சாலைகள் அமைக்கும் பணி. இடம்:வடபழனி சாலை
குடிநீர் வசதியில்லை,மின்சாரம் வசதியில்லை,சாலைவசதியில்லை,தெரு விளக்குகள் இல்லை,பேருந்து வசதியில்லை,கழிப்பறை வசதியில்லை,இப்படி எத்தனை முறை அதிகாரிகளிடமும்,ஆட்சியாளர்களிடமும் முறையிட்டிருப்போம்,நடவடிக்கையே இருக்காது.ஆனா இப்போ இது எல்லாம் மெல்ல மெல்ல நடக்குதே! என மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.அதாவது,சில இடங்களில் மேலே கூறிய நிறைவேறாத அடிப்படை வசதிகளை அதிகாரிகளும்,ஆட்சியாளர்களும் செய்து வருகின்றார்கள்.”எத்தன வாட்டி நாம்ப சொல்லிருப்போம் ஏதாவது செஞ்சானுங்களா? இப்ப பாரு விழுந்து விழுந்து செய்றானுங்க….ம்..தேர்தல் வருத்துல….” என நாம் புகைப்படம் எடுக்கும் போது இரு பெண்கள் பேசியது நம் காதில் கேட்டது.”அட ஆமா…. என நாமும் யோசித்தோம் அதுவே இக்கட்டுரையை எழுத காரணமாக இருந்தது.

தேர்தல் வருவதால் அவசரமாக சாலைகள் அமைக்கும் பணி இடம்:வடபழனி சிக்னல் அருகில்
5ஆண்டிற்கு ஒரு முறை தேர்தல் வரும்போதெல்லாம் நான் இதை செய்வேன் அதை செய்வேன் என்று ஒவ்வொரு வாக்காளர்களின் காலில் விழுந்து ஓட்டுகேட்கிறார்கள்.அதன் பின்னர்,நாம் அவர்களின் கால்களை பிடிக்க வேண்டியிருக்கு.மக்கள் ஒன்றும் அவர்களின் சொந்த பிரச்சனைகளை தீர்க்க சொல்லி முறையிடுவதில்லை.ஊர்களின் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தியே முறையிடுகின்றன.பின்னர் ஏன் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை?தொகுதிக்கு சென்று, உங்கள் எம்.எல்.ஏ; யார்? அவர் எந்த கட்சி? அவரின் அலுவலகம் தெரியுமா? என்று கேள்வி கேட்டால் பெருமான்மையான மக்களுக்கு தெரியவில்லை.
இது மக்களின் மீது தவறல்ல, ஒரு எம்.எல்.ஏ தன் தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்தால் தானே மக்களுக்கு தெரியும்,இவர் தான் நம் எம்.எல்.ஏ என்று. தெருத்தெருவாக நடந்து,கும்மிடு போட்டு பவ்யமாக ஓட்டுக்களை கேட்கிறார்கள்.ஜெய்த்தபின் முன்னாடி சைரன் வைத்த இரண்டு கார்,பின்னாடி சைரன் வைத்த இரண்டு கார் என பந்தாவாக செல்கிறார்கள் பின்னே எப்படி தெரியும்? எம்.எல்.ஏ பார்க்க அலுவலகத்திற்கு சென்றால் பெருபாலும் அங்கு இருப்பதில்லை. மனு கொடுத்தாலும்,அனுப்பப்பட்டாலும் எம்.எல்.ஏ கைக்கு சென்றதா? என்றும் தெரியவில்லை.அப்படியே எம்.எல்.ஏ கைக்கு சென்றாலும்,அவரின் பி.ஏ அதனை படித்து சம்மந்தப்பட்ட அதிகாரிக்கு அனுப்புவார்,அவர் மட்டும் நடவடிக்கை எடுப்பாரா என்ன?
இது ஒருபுறமிருக்க, ஒரு எம்.எல்.ஏவின் மாத சம்பளம் ஒன்றரை லட்சம்.இது போக,எம்.எல்.ஏவுக்கென பிரத்தேக இலவச விடுதி, வேலை ஆட்கள், இலவச வாகன வசதிகள் என பல சலுகைகள் உள்ள.இதற்கு எல்லாத்திற்கும் மேலாக ஒவ்வொரு எம்.எல்.ஏவுக்கும் மாதம் மாதம் ஒரு பெரும் தொகையாக தொகுதி மேம்மாட்டிற்காக நிதி வழங்கப்படுகிறது. இவ்வளவு சலுகைகள்,சம்பளம்,நிதி என சகல வசதிகளும் எம்.எல்.ஏவுக்கு கொடுக்கப்படுகின்றன.அப்படியிருந்தும் தொகுதியின் அடிப்படை வசதிகளை செய்துத்தராமல் இருப்பது நியாயமா? தொகுதி நிதியை ஒழுங்காக பயன்படுத்தினால் இன்று ஒவ்வொரு மாவட்டமும் வல்லரசு அடைந்திருக்கும்.
குறைந்தது மக்கள் கொடுக்கும் புகாரின் மீது நடவடிக்கை எடுத்திருந்தாலே ஒவ்வொரு தொகுதியும் மேம்பட்டிற்கும்.தேர்தல் நேரத்தில் மட்டும் தான் நடவடிக்கைகள் எடுக்கப்படுமா? தேர்தல் நேரத்தில் மட்டும் பாவனை செய்வது ஏன்? ஓட்டுக்கா? பதவிக்கா? அப்போது மக்களின் நலனில் மீது அக்கறை இல்லையா? போன்ற கேள்விகள் நம்மீது எழுகின்றன.அதே போல் மக்களும், தன் தொகுதி பக்கம் கூட வராத எம்.எல்.ஏவை மீண்டும் மீண்டும் தேர்வு செய்கின்றார்கள். ஒரு ஓட்டிற்கு 1000 முதல் 2000 வரை பணம் கொடுத்தால் போதும் வாக்களிக்க பல மக்கள் ரெடியாக இருக்கின்றார்கள்.இத்தகைய போக்குகள் மாறும் வரை தொகுதிக்கு நல்லதே நடக்காது.
அது இத்தேர்தலில் மாறவேண்டும்.ஓட்டு கேட்க வரும் வேட்பாளர்களிடம் தங்கள் தொகுதியின் பிரச்சனைகளை முன்வையுங்கள். வாக்களிக்கிறோம் பிரச்சனைகளை சரிசெய்யாவிட்டால் ராஜினாமா செய்யவேண்டும். என வேட்பாளர்களிடம் தெரிவித்து கைப்பட ராஜினாமா கடிதத்தை எழுதி வாங்கிக்கொள்ளுங்கள்.மீண்டும் ஓட்டுக்கேட்க ஆட்சியாளர்கள் வந்தால்,தொகுதி நிதி பணத்தை கணக்கு கேளுங்கள். மீண்டும் மீண்டும் ஒரே எம்.எல்.ஏவை தேர்வு செய்யாதீர்கள்.வேஷம் போடும் எம்.எல்.ஏவின் முகத்திரையை கிழியுங்கள்.2021 தேர்தலில் மாற்றத்தை கொண்டு வாருங்கள்!