
ஷாருகானிடம் அட்லீ ஒரு கதை சொல்லி இருக்கிறார்,இந்த கதை ஷாருக்கானுக்கு பிடிக்கவில்லையாம்.ஏன் அட்லீ சொன்ன கதை ஷாருக்கானுக்கு பிடிக்கவில்லை?என கோலிவுட்டில் விசாரித்த போது,ஷாருகானிடம் அட்லீ சொன்ன கதை கமல் நடித்த “நாயகன்” படத்தின் கதையின் உல்டாவாம்.ஓஒ…அதனாலதான் ஷாருக்கான் பயந்துவிட்டார்.

“பொன்மகள் வந்தாள்” திரைப்படத்தை ஓ.டி.டி தலத்தில் ரிலீஸ் செய்தால்,சிவகுமார் குடும்பத்தினர் நடித்த படம் இனி தியேட்டரில் ரிலீஸ் ஆகாது என தியேட்டர் அதிபர்கள் சங்கம் எச்சரித்தார்கள்.இதை மீறி “பொன்மகள் வந்தாள்” ஓ.டி.டி தலத்தில் ரிலீஸானது.படம் எதிர் பார்த்த வெற்றியை தரவில்லை. தியேட்டர் அதிபர்கள் அறிவித்தபடி சிவகுமார் குடும்பத்தினர் நடித்த படம் இனி தியேட்டரில் ரிலீஸ் ஆகாது,என்கின்ற நிலைப்பாட்டில் உள்ளனர்.இந்த சூட்டைத் தணிக்க,தியேட்டர் ஊழியர்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கி,புது நெருக்கம் வளர்க்கலாமா என்று சூர்யா தரப்பில் ஒரு பிளான் தொடங்கி இருக்கிறதாம்.

கொரோனாவில் இருந்து மீண்டுள்ள பாகுபாலி இயக்குனர் ராஜமவுலி,3 வாரங்கள் கழித்து பிளாஸ்மா தானம் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

“வனமகன்”,”கடைக்குட்டி சிங்கம்”,”ஜூங்கா”,”கஜினிக்காந்த்”,”காப்பான்”,ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்துவரும்,நடிகர் ஆர்யாவின் மனைவியுமான சாயிஷா தனது 23வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி சிம்பிளாகக் கொண்டாடியுள்ளார்.

சுதா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்துள்ள“சூரரைப் போற்று”படத்தில்,விதிமுறைகளுக்கு மீறி இடம் பெற்ற 12 வார்த்தைகளை சென்சார் போர்டு நீக்கியுள்ளது.

இந்தியில் மகேஷ் பட் இயக்கத்தில் அவரது மகள்கள் அலியா பட்,பூஜா பட்,நடித்துள்ள “சடக்2” படத்தின் டிரெய்லர் நேற்று முன்தினம் வெளியானது.அதை பார்த்த 2 கோடி பேரில்,லைக் செய்தவர்கள் வெறும் 3 லட்சம் பேர்தான்.ஆனால் டிஸ்லைக் செய்துள்ளவர்கள் 60 லட்சம் பேர்.இதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகிறது. 1.படத்தில் இடம் பெற்றுள்ள இந்து மத விமர்சனங்கள். 2. நடிகர் சுஷாந்த் சிங் மரண விவகாரத்துக்கு பட் குடும்பத்தின் பாலிவுட் ஆதிக்க தர்பாரும் ஒரு காரணம் என்று வந்துள்ள குற்றச்சாட்டு.