SOORARAI POTTRU நாளை AMAZON PRIME -ல் வெளியாகிறது : புதுவிதமான ப்ரோமோஷனில் இறங்கிய படக்குழு.
தீபாவளிக்கு இந்தவருடம் புதுப்படங்கள் எதுவும் வெளியாகாது என்று தெரிவித்திருந்தனர். ஆனால், இப்போது வரிசையாக இரண்டு படங்கள் திரையரங்கில் வெளியாவதாக உள்ளன. ஏற்கனவே, மூக்குத்தி அம்மன், சூரரை போற்று படங்கள் தீபாவளியன்று OTT -ல் வெளியாக உள்ளன. திரையரங்குகள் கொரோனா பரவலின் காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில், நேற்று முதல் தமிழகத்தில் திறக்க அனுமதி வழங்கியதுள்ளது அரசு.
அதன்மூலம், 50% இருக்கைகளுடன் மட்டுமே திரையரங்குகள் திறக்க அனுமதி. பழைய வெற்றி படங்களை திரையரங்குகள் திரையிட்டு வருகின்றன. அரசு வழிகாட்டுதலின் படி திரையரங்குகள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், புது படங்கள் தீபாவளியன்று திரையிடப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், “பிஸ்கோத்”, “இரண்டாம் குத்து” படங்கள் திரையரங்கில் வெளியாக உள்ளன.
ஆனால், ஏற்கனவே OTT -ல் வெளியாவதாக இருந்த படங்கள் திட்டப்படி வெளியிட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்மூலம், நாளை [12.11.2020] “சூரரை போற்று திரைப்படம் AMAZON PRIME -ல் வெளியாக உள்ளது. இப்படத்திற்காக, ப்ரோமோஷன் வேளைகளில் ஈடுபட்டுள்ள படக்குழு தற்போது புதுவிதமான ப்ரோமோஷனை மேற்கொண்டுள்ளது.
ரசிகர்களின் ஆட்டோகிராப்களை ஒன்றாக ஒரு பட்டம் போல வடிவமைத்து “SPACE BALOON” ஒன்றை விண்ணில் ஏவினர். அதில் கேமரா பொருத்தி கண்காணிக்கப்பட்டது. அது விண்ணில் பறக்கும் காட்சி படமாக்கப்பட்டு அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இது நடந்தது ஜெர்மனியில்.
இந்நிலையில், சூரரை போற்று திரைப்படம் நாளை வெளியாவதாக இருந்தது. அது திட்டமிட்டபடி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 12:00 மணியளவில் படம் வெளியாக வாய்ப்பிருப்பதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது. ஆனால், இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை. ஆகமொத்தத்தில், SOORARAI POTTRU திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. நெடுமாறன் ராஜாங்கத்தின் கர்ஜனையை காண்போம்.
Also Read : தீபாவளி சிறப்பாக 3 தமிழ் படங்களின் TRAILER : EXCLUSIVE UPDATE.