ஜவ்வாதுக்கு இத்தனை மகிமையா|ஆச்சரியமான தகவல்கள்!

javadhu-powder

இன்று பலரும் தங்களுடைய உடம்பிலும், உடைகளிலும் வாசனைக்காக செயற்கை திரவியங்களை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இதையே அந்த காலத்தில் பாரம்பரியமாக ஜவ்வாது உபயோகப்படுத்தி நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர். தெய்வீக பொருட்களிலும், வாசனை திரவியம் ஆகவும் பயன்படும் ஜவ்வாது, விசேஷ சக்திகளை கொண்டுள்ளது. சாதாரணமாக மலரும் மலர்களின் வாசமும் ஒரு மனிதனை அமைதியான மனநிலைக்கு கொண்டு செல்கிறது. அவ்வகையில் ஜவ்வாது அதையும் தாண்டி மனதிற்கு புத்துணர்ச்சியை கொடுக்க வல்லது என்றால் அது மிகையாகாது. அப்படியான ஜவ்வாதுவை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

cinnamon

பொதுவாக பூஜை பொருட்களுடன் ஜவ்வாது, அரகஜா, புனுகு போன்ற விஷயங்களை சேர்த்து கோவில்களில் கொடுப்பதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம். இவைகள் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. கோவில்களிலும் சரி, வீடுகளிலும் சரி ஜவ்வாது பயன்படுத்துவது விசேஷமான பலன்களை கொடுக்கும். கோவில்களில் நீங்கள் அபிஷேகம் ஏற்பாடு செய்திருந்தால் பூஜைப் பொருட்களுடன் ஜவ்வாது கொடுப்பது உசிதமானது. அதிலும் குறிப்பாக சிவன் கோவில்களில் இதனை கொடுப்பது தொழில் மற்றும் வியாபார ரீதியான தடைகளை தகர்க்கும்.வருமானம் தரக்கூடிய விஷயத்தில் தொடர்ந்து சிக்கல்கள் நீடித்தால் கோவில்களுக்கு ஜவ்வாது தானமாக அளிக்கலாம். தெய்வீக மணம் படைத்த ஜவ்வாது வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு மூலிகைப் பொருள் ஆகும்.

 

பூஜை அறையிலும், நம்முடைய சொந்த பயன்பாட்டிற்கும் ஜவ்வாது பயன்படுத்துவது நல்லது.நல்ல வாசம் உள்ள இடத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது. அவ்வகையில் செயற்கையை தவிர்த்து, இயற்கையான ஜவ்வாது மூலிகையை வீட்டில், பூஜை அறையில் பயன்படுத்துவதால் மகாலட்சுமி கடாட்சம் உண்டாகும். சுவாமி படங்களுக்கு பொட்டு வைக்கும் பொழுது ஜவ்வாது பயன்படுத்தி பொட்டு வைப்பது அற்புதமான பலன்களைக் கொடுக்கும். அது போல் ஜவ்வாதுவை உடம்பில் ஏதாவது ஒரு இடத்தில் தடவிக் கொண்டால் அன்றைய நாள் முழுவதும் மனம் சாந்தமாக இருப்பதை நீங்கள் உணரலாம்.மன உளைச்சல், மன இறுக்கம் போன்ற நோய்களுக்கு உட்பட்டவர்கள் அதில் இருந்து வெளியேறுவதற்கு ஜவ்வாது பயன்படுத்தலாம்.

ஜவ்வாது நாட்டு மருந்து கடைகளில் பொடியாகவும், பேஸ்டாகவும் கிடைக்கப் பெறுகிறது. இதனை ஒரே ஒரு துளி கையிலெடுத்து உங்களுடைய ஆடையில் குளித்து முடித்ததும் லேசாக தடவி விட்டால் போதும். அதனுடைய மணம் உங்களுடைய மனதை சாந்தப்படுத்தும். நேர்மறை எண்ணங்களை அதிகரிக்க செய்யும். உண்மையில் தெய்வீக மூலிகை ஆக கருதப்படும் ஜவ்வாது நல்ல சிந்தனைகளை மேலோங்குவதற்கு உதவி செய்கிறது.வீட்டிலிருக்கும் குழந்தைகளுக்கும் அவர்கள் குளித்ததும் லேசாக ஆடையில் தடவி விடுங்கள். அவர்களை எந்த திருஷ்டியும் தாக்காமல் அது பாதுகாக்கும். ஜவ்வாது அதிகமாக பயன்படுத்தக் கூடாது.

javadhu-paste

 

லேசாக ஜவ்வாது பொடியை தண்ணீரில் கலந்து உடையில் தடவி கொண்டாலே போதுமானது. உடல் முழுவதும் அருமையான வாசனை வரும். அந்த வாசம் மனதை ஒருநிலைப்படுத்தும். அடிக்கடி கோபப்படுபவர்களும், முன்கோபம் உடையவர்களும் ஜவ்வாது பயன்படுத்தினால் நல்ல தீர்வு கிடைக்கும். தமிழரின் பாரம்பரியமாக விளங்கும் தெய்வீக மூலிகை வாசனை திரவியம் ஜவ்வாதுவை தினமும் பயன்படுத்தி நல்ல பலன்களை பெறுங்கள்.

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp

Also Read

Scroll to Top