‘விடியலுக்கான முழக்கம்’|திருச்சியில் நாளை திமுக பொதுக்கூட்டம்:

‘விடியலுக்கான முழக்கம்’|திருச்சியில் நாளை திமுக பொதுக்கூட்டம்:

mu-ka-stalin

திருச்சியில் நாளை ‘விடியலுக் கான முழக்கம்’ என்ற பெயரில் திமுக பொதுக்கூட்டம் நடை பெறுகிறது. இதில், நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

திமுக தலைமை கழகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூ றப்பட்டுள்ளதாவது;

mu-ka-stalin

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று காலை, திமுக மாவட்ட செயலாளர்களின் கூட்டம் காணொலிக்காட்சி வழியாக நடைபெற்றது. அப்போது 7-ந் தேதி (நாளை) திருச்சியில் நடைபெறவுள்ள மாபெரும் பொதுக்கூட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தமிழகத்தின் “விடியலுக்கான முழக்கம்” என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் பொதுக்கூட்டம் காலை 11 மணிக்கு துவங்கி மாலை 8 மணி வரை நடைபெறும் என்றும், அந்தக் கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் மூலம் முக ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

M.-K.-Stalin

அதோடு, நடைபெறவுள்ள 2021 சட்டமன்றத் தேர்தலில், தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்டுள்ள 80 வயது மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோர்-நோயுற்றவர்களாகச் சந்தேகிக்கப்படுபவர்கள் ஆகியோருக்கான தபால் வாக்குகள் பதிவு செய்யும் நடைமுறைகளை உன்னிப்பாகக் கவனித்து, அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

dmk-pics

இந்தக் கூட்டத்தில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் இ.பெரியசாமி, க.பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா எம்.பி., அந்தியூர் ப.செல்வராஜ் எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., மாவட்டக்கழகச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் பி.வில்சன் மற்றும் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் பங்கேற்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி:தினத்தந்தி

 

மேலும் படிக்க: 

கமலுக்கு ஆதரவாக சரத்குமார்…|சரத்குமார் கடந்து வந்த பாதை!

கொஞ்சமாடா…பேசுனீங்க…பழிவாங்கும் ஸ்டாலின்!

 

Follow us on :

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top