நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி ரிலீசுக்கு தயாராக இருக்கும் படம் “டாக்டர்”. கோலமாவு கோகிலா படத்தின் மூலம் பிரபலமானார் நெல்சன் திலீப்குமார். இவரது இயக்கத்தில், சிவகார்த்திகேயன், வினய், பிரியங்கா மோகன், அர்ச்சனா, யோகிபாபு போன்ற பலர் நடித்துள்ள படம் டாக்டர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் மூன்று பாடல்கள் இதுவரை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மார்ச் 26 -ஆம் தேதி படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அதற்கு பிரச்சாரம் செய்வதற்கும் பல அரசியல் காட்சிகள் தொடங்கிவிட்டன. இதனை கருத்தில் கொண்டு படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2021 -க்கான ஐ.பி.எல் போட்டி நடைபெற இருக்கிறது. அதனையும் கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக படத்தின் வசூல் பாதிக்கும் என்பதால் ரிலீஸை ஒத்திவைத்துள்ளது தயாரிப்பு நிறுவனம். மேலும், படத்தின் புதிய ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலும் தேர்தல் மற்றும் ஐ.பி.எல் முடிவடைந்த பின்னர் தான் படத்தின் ரிலீஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். மேலும், வாக்களிக்கும் செல்லும் போது மக்கள் அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும் என்று போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. “டாக்டர்” படம் வருகின்ற ஏப்ரல் மாதம் ரம்ஜான் தினத்தன்று வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
மேலும் படிக்க:
விஜயகாந்தை சந்தித்து கதறி அழுத வடிவேலு|ஆறுதல் சொன்ன பிரேமலதா!