சிம்புவின் மாநாடு படத்தின்….ரிலீஸ் ஒத்திவைப்பு : தயாரிப்பாளர் உருக்கம்.

simbu maanaadu first single release date postponed

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் படம் “மாநாடு”. நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருக்கிறார். மேலும்,படத்தில் பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர் போன்றோர் நடித்துள்ளனர். படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நாயகி கல்யாணி பிரியதர்ஷன் முன்னதாக சிவகார்த்திகேயனுடன் “ஹீரோ” படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர், இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் ஆவார்.

மாநாடு படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டு இடையில் கொரோனவால் தடைபட்டது. ஐதராபாத், சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட  இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்நிலையில், மாநாடு படத்தின் ஷூட்டிங் ஸ்டில்ஸ்கள் அவ்வப்போது வெளியாகும். சமீபத்தில் கூட சிம்பு படப்பிடிப்பு தளத்தில் தரையில் படுத்திருந்த புகைப்படம் வெளியாகி வைரல் ஆனது. மேலும், பல ஷூட்டிங் ஸ்டில்ஸ்கள் வெளியாகி வைரலாகின. அவ்வப்போது படத்தை பற்றிய அப்டேட்களை படக்குழு தந்துவந்தன.

மேலும், ரசிகர்கள் படத்தின் ட்ரைலர், பாடல்கள், ரிலீஸ் தேதி போன்ற அப்டேட்டிற்காக காத்திருக்கின்றனர். சமீபத்தில் படத்தின் முதல் பாடல் (First Single) வரும் ரமலான் பண்டிகையன்று வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. அனால், தற்போது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பாடல் வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். அதற்கான காரணத்தையும் அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி அவர்களின் தயார் மறைந்தார். அந்த துக்கத்தில் பங்கு கொள்ளும் நோக்கில் பாடல் வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்படுவதாக கூறியுள்ளார்.  மேலும், கொண்டாட்டங்களையும் தாண்டி கவனமாக இருங்கள், விரைவில் மீள்வோம் நண்பர்களே என்று கூறியுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் சுரேஷ் காமாட்சி.

 

 

 

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top