நிவர் புயல் காரணமாக,சென்னை கடும் பாதிப்புக்குள்ளானது.மழை நீர் சென்னையை சூழ்ந்துக்கொண்டது.மரங்களும்,மின் கம்பங்களும் சரிந்து விழுந்தன.ரோட்டில் இருக்கும் பள்ளம் தெரியாதவாறு மழை நீர் தேங்கி இருந்ததால்,வாகனஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்கள்.தற்போது புயல் கடந்து விட்டாலும் சில இடங்களில் மழை பெய்து வருகிறது.இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில்,பல பகுதிகளில் டிராபிக் சிக்னல்கள் இயங்கவில்லை.
குறிப்பாக வள்ளுவர் கோட்டம் நான்கு முனை சந்திப்பில் சிக்னல் இயங்கவில்லை.இயற்க்கை பேரிடரில் போது,மரங்கள் விழுந்து மின்சாரம் துண்டிப்பது இயல்புதான்.ஆனால் எங்கு சிக்னல்கள் இயங்கவில்லையோ அங்கு உடனடியாக ஒரு போக்குவரத்து காவலரை நியமித்து ஒழுங்குப்படுத்தலாமே?
தற்போது அடுத்தொரு காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதாகவும்,அது வரும் 29ம் தேதி வழுவிழுந்து அடுத்த மாதம் 2ம் தேதிகளில் புயலாக மாறக்கூடும் என்றும் கூறப்படுகிறது.ஆகையால்,இது போன்ற குறை பாடுகளை சரிசெய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.