ஹிந்தியில் ரீமேக் ஆகும் ஷங்கரின் “அந்நியன்” :  விக்ரம் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங்.

anniyan hindi remake ranveer singh as lead

தமிழில் கடந்த 2005-ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான படம் “அந்நியன்”. வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக இப்படத்தின் சண்டை காட்சிகள் பெரும் வரவேற்பை பெற்றன. விரக்ரமிற்கு ஜோடியாக சதா நடித்திருந்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.  இதில், விக்ரமின் நடிப்பு மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. அந்நியன் மற்றும் அம்பி கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது. தற்போது, இப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. அதையும் ஷங்கரே இயக்குகிறார்.

anniyan vikram

சமீப காலமாக தமிழில் ஹிட்டான படங்களை ஹிந்தியில் ரீமேக் செய்து வருகின்றனர். குறிப்பாக, ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா திரைப்படம் ஹிந்தியில் “லட்சுமி” என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதில், அக்ஷய் குமார் நடித்திருந்தார்.  நயன்தாரா நடித்த “கோலமாவு கோகிலா” திரைப்படம் ரீமேக் செய்யப்படுகிறது. இதில், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரை நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ranveer singh in anniyan hindi remake

மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் மற்றும் கைதி படங்கள் அடுத்தடுத்து ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளன. இந்நிலையில், கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான அந்நியன் படம் ரீமேக் செய்யப்படவுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ஹிந்தியில் எடுக்கப்படவுள்ள அந்நியன் படத்திற்கு நடிகர் ரன்வீர் சிங்கை நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது.

An-overwhelmed-Ranveer-Singh-pens-heartfelt-message-before-Padmaavat-release

தற்போது, ஷங்கர் இந்தியன்-2 படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்தியன்-2 படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மீதமுள்ளது. அடுத்ததாக, ராமச்சரன் தேஜா நடிப்பில் புதிய படத்தை இயக்கவுள்ளார். அதனை முடித்துவிட்டு “Anniyan” படத்தின் ஹிந்தி ரீமேக்கை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும் படிக்க: 

 

 

இந்தியன்-2 படப்பிடிப்பு தாமதத்திற்கு காரணமா இதுதானா ? காஜல் அகர்வால் விளக்கம். 

 

விஜய்சேதுபதியின் 46-வது படம் : பொன்ராம் இயக்குகிறார்.

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top