Main Menu

What’s New?

Connect With Us

SEENU RAMASAMY குற்றச்சாட்டு : தொலைபேசியில் மிரட்டல் விடுக்கப்படுகிறது.

Read Carefully

SHARES

SEENU RAMASAMY குற்றச்சாட்டு, தொலைபேசியில் மர்ம நபர் மிரட்டல். இயக்குர் சீனு ராமசாமி அவர்கள் “800” படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இலங்கை அனரசின் ஆதரவாளரான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க இருந்தனர். நடிகர் விஜய் சேதுபதி  முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார். பிறகு, இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாதென்று பல்வேறு எதிர்ப்புகள் ஏற்பட்டன. 
இதில் முக்கியமாக இயக்குனர் சீனு ராமசாமி, இயக்குனர் அமீர், போன்ற பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்புகள் அனைத்தும் விஜய்சேதுபதியின் மேல் உள்ள தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளால் ஏற்பட்டது அல்ல.      நம் தமிழ் இனத்தை அழிக்க நினைத்த இலங்கை அரசுக்கு ஆதரவாக இருந்ததாக கூறி முத்தையா முரளிதரன் மீது ஏற்பட்ட வெறுப்பே இந்த எதிர்ப்புகளுக்கு காரணம். 
seenu
 
 
 
சில நாட்களுக்கு பிறகு, விஜய் சேதுபதி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில் “நன்றி, வணக்கம்” என பதிவிட்டிருந்தார்.    இதற்கு காரணம் புரியாமல் ரசிகர்களும், சினிமா வட்டாரங்களும் குழம்பின.     பின்னர், செய்தியாளர்களை சந்தித்த விஜய் சேதுபதி நன்றி, வணக்கம் என்றால் எல்லாம் முடிந்து விட்டது என்று அர்த்தம் என கூறினார். எல்லாம் முடிந்துவிடாதாக அவர் கூறியது “800” படம் கைவிடப்பட்டது என்பதைதான். 800 படம் எடுக்கும் முயற்சியில் இருந்து படக்குழு பின்வாங்கியது. இதனை, விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார்.  பிறகு, தான் நடிக்க இருக்கும் மற்ற படங்களின் பணிகளில் ஈடுபட்டார் விஜய்சேதுபதி. 
 
இன்று காலை இயக்குனர் சீனு ராமசாமி, தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டார். “என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதல்வர் ஐயா உதவ வேண்டும், அவசரம்! என பதிவிட்டிருந்தார்.  இதனை பார்த்த ரசிகர்கள் காரணம் கேட்டறிந்து மறுபதிவு செய்தனர். 
800 படத்தில் நடிக்க வேண்டாம் என்று விஜய்சேதுபதிக்கு அறிவுறுத்தினார். இதன் காரணமாக ஒரு சில மர்ம நபர்கள் சீனு ராமசாமிக்கு தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்டது.  இதன் தொடர்பாக காவல் துறையில் வழக்கு பதிவு செய்ய சென்றபோது செய்தியாளர்களை சந்தித்தார் சீனு ராமசாமி. 
 
செய்தியாளர் சந்திப்பு :
செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த சீனு ராமசாமி தனக்கு  மிரட்டல்கள் வந்தாக கூறினார். முகம் தெரியாத நபர்கள் தொடர்பு கொண்டு ஆபாச வார்த்தைகளாலும், கெட்ட வார்த்தைகளாலும் திட்டியதாக கூறினார்.   “800” படத்தில் இருந்து விஜய்சேதுபதியை விலக அறிவுறுத்தியது தொடர்பாக மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு தொந்தரவு செய்வதாக கூறினார். 
 
 
“800” படத்தின் போஸ்டர் வெளியானதில் இருந்து தனது கருத்துக்களை பொதுவெளியிலும், தனிப்பட்ட முறையிலும், விஜய் சேதுபதியிடம் கூறி வருவதாக கூறினார். இந்த கதைக்கு பின் இவ்வளவு பெரிய அரசியல் விவகாரம் இருப்பது தெரியாமல் கதை பிடித்ததால் மட்டுமே நான் இதற்கு ஒத்து கொண்டேன் என விஜய் சேதுபதி கூறியுள்ளார்.  விஜய்சேதுபதிக்கு, தனக்கும் நல்ல நட்புறவு இருப்பதால் நான் சொன்ன கருத்தை அவர் புரிந்து கொண்டதாக கூறினார். 
 
இதனை புரிந்து கொள்ளாமல், மர்ம நபர்கள் சில பேர் நள்ளிரவில் தொடர்பு கொண்டு ஆபாச வார்த்தைகளில், பேசுவதாக கூறினார். 
அப்படி பேசுவோர்களின் நோக்கம் என்னவாக இருக்கும் என்பது தெரியவில்லை. சீனு ராமசாமி, தனது வீட்டில் குடும்பத்தாரோடு நிம்மதியாக வாழ்வதை கெடுக்க நினைக்கும் நபர்கள் தொலைபேசியிலும், மெசேஜ் மூலமாகவும் என்னை தொந்தரவு செய்வதாகவும் கூறினார். தற்போது, காவல்துறையில் வழக்கு தொடுக்க போவதாகவும், தான் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறினார். 
 
சீனு ராமசாமி காவல் துறையில் வழக்கு தொடுத்த பின் செய்தியாளர்களை சந்தித்தால் மற்ற விவரங்கள் தெரிய வரும்.  
 
 
 
 
Top