Main Menu

What’s New?

Connect With Us

எஸ்.பி.பி.கவலைக்கிடம்:அதிர்ச்சியில் ரசிகர்கள்

Read Carefully

SHARES

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை மோசமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு இருமல்,மற்றும் காய்ச்சல் இருந்துள்ளது.இதனை அடுத்து கடந்த 5 ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை மேற்கொண்டார்.இதில் அவருக்கு லேசான கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.தான் நலமாக இருப்பதாகவும்,யாரும் பயப்பட வேண்டாம் என்றும் சமூக வலைத்தலங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

இன்று அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறப்பு மருத்துவக் குழு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து கண்காணித்து வருகிறது.இந்நிலையில் நேற்று இரவு முதல் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.செயற்கை சுவாசக் கருவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.அதே நேரத்தில் தொடர்ந்து அவரது உடல்நிலை குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.பூரண நலம் பெற இறைவனை வேண்டிக்கொள்கிறது Chennaiyil.Com.

Top