கமலுக்கு ஆதரவாக சரத்குமார்…|சரத்குமார் கடந்து வந்த பாதை!

கமலுக்கு ஆதரவாக சரத்குமார்|சரத்குமார் கடந்து வந்த பாதை!

rsarathkumar

கட்சி ஆரம்பித்து குறுகிய நாட்களிலேயே தென்காசி தொகுதியில் வெற்றி பெற்றார் நடிகர் சரத்குமார். இன்றும் ஓர் தவிர்க்கமுடியாத அரசியல் தலைவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

sarathkumar759

புதுடெல்லியில், 1954-ம் ஆண்டு பிறந்தார். இவர் காரைக்குடியை அடுத்துள்ள சிவகங்கை மாவட்டத்திலுள்ள தலக்காவூர் நாடார் குடும்பத்தை சேர்ந்தவர். கணிதத்தில் இளங்கலை பட்டப்படிப்பை சென்னை புதுக்கல்லூரியில் படித்தார்.

suprem star.

1986 முதல் 1991 வரை வில்லனாகவும் சிறிய வேடத்திலும் நடித்தார் சரத்குமார். அதன் பின்னர் சரத்குமாருக்கு ஏறுமுகம் தான் என்று சொல்ல வேண்டும். தொடர்ந்து பல படங்களில் நடித்து வெற்றி பெற்றார். அதில், நட்புக்காக, சூரியவம்சம், நாட்டாமை, நேதாஜி, ரகசிய போலீஸ் போன்ற திரைப்படம்   குறிப்பிடத்தக்கவை.

RadikaaSarathKumar

தமிழக அரசின் கலைமாமணி விருது, எம்ஜிஆர் விருது, ஃபிலிம்ஃபேர் விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருது, சிறந்த வில்லன் நடிகர் விருது, செவாலியே சிவாஜி கணேசன் விருது, தினகரன் சினிமா விருது, போன்ற எண்ணற்ற விருதுகளை வாங்கி குவித்திருக்கிறார்.

Sarathkumar-back-with-AIADMK

சினிமா துறைக்கு வருவதற்கு முன்பே, சாயாதேவி என்பவரை காதலித்து மணம் புரிந்தார். இவர்களுக்கு வரலட்சுமி, பூஜா என்னும் இரு மகள்கள் உள்ளனர். சரத்குமாருக்கும், நடிகை நக்மாவுக்கும் ஏற்பட்ட காதலால் சாயாதேவி, சரத்குமார் விட்டு சென்றுவிட்டார்.

sarath-old-getup

அதன் பின்னர் நடிகை ராதிகாவுடன் ஏற்பட்ட காதலால், 2001-இல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ராகுல் என்ற மகன் இருக்கிறார்.

முன்னாள் தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்கத் தலைவராகவும் பதவி வகித்தார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.

Sarathkumar_EPS

1996 ஆம் ஆண்டு திமுகவில் சேர்ந்தார். 1998ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாராளுமன்ற வேட்பாளராக திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2001-இல் திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். 2006 ஆம் ஆண்டு அக்கட்சியில் ஏற்பட்ட பிரச்சனையால், தேர்தலுக்கு முன்னரே வெளியேறிவிட்டார். அதன் பின்னர் அதிமுகவில் மனைவி ராதிகாவுடன் இணைந்தார். தீவிர பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.

SARATH_KUMAR-with-jayalalitha

ஆனால் அத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. 2006 கட்சிக்கு எதிராக ராதிகா செயல்படுகிறார் என்று கூறி கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதன் காரணமாக சரத்குமாரும் வெளியேறினார். பின்பு, சரத்குமார் 2007-இல் “அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி” என்று தன் கட்சியை தொடங்கினார். காமராஜர் ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் கொண்டுவருவேன் என அறிவித்தார்.

sarath-kumar-pic

இருப்பினும் அதிமுகவுடன் மீண்டும் கூட்டணியில் இணைந்தார். கடந்த 10 ஆண்டு காலமாக அதிமுகவில் தவிர்க்க முடியாத கூட்டணி கட்சியாக ச.ம.க; இருந்து வந்துள்ளது. ஜெயலலிதா இருக்கும் வரை சரத்குமாருக்கு மரியாதை இருந்தது. ஆனால் இந்தத் தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தன்மை அழைக்கவில்லை என்றும் அ.தி.மு.க;வில் எனக்கு கொடுக்கப்பட வேண்டிய மரியாதை கொடுப்பதில்லை என்றும் குற்றஞ்சாட்டி அதிமுகவிலிருந்து வெளியேறி, ‘மக்கள் நீதி மைய’ தலைவர் கமலஹாசனை  சந்தித்து ஆதரவு கொடுத்தார் சரத்குமார்.

sa.ma_.ka

இந்நிலையில், கமலஹாசன் தான் முதல்வர் வேட்பாளர் என்று தூத்துக்குடியில் சரத்குமார் பேசினார். இன்னும் ஓரிரு நாட்களில் உறுதியாகிவிடும் என்று நம்பிக்கை தெரிவித்தார். கமலஹாசன் கட்சியில் பலரும் இணைவதால், மக்கள் நீதி மையத்திற்கு கூடுதல் பலம் என்றே சொல்ல வேண்டும்.

 

மேலும் படிக்க:

கொஞ்சமாடா…பேசுனீங்க…பழிவாங்கும் ஸ்டாலின்!

பதவி தேடி வர…இந்த கோயிலுக்கு போங்க…|தேர்தல் நேரம்!

 

Follow us on :

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top