Warning: Error while sending QUERY packet. PID=6025 in /var/www/site/public/wp-includes/wp-db.php on line 2024

Warning: Error while sending QUERY packet. PID=6025 in /var/www/site/public/wp-includes/wp-db.php on line 2024
சாகித்ய அகாதெமி எழுத்தாளர் காலமானார்|கமல் இரங்கல்:

Main Menu

What’s New?

Connect With Us

சாகித்ய அகாதெமி எழுத்தாளர் காலமானார்|கமல் இரங்கல்:

சாகித்ய-அகாதெமி-எழுத்தாளர்-காலமானார்
Read Carefully

SHARES

writer.a-madhavan

சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் ஆ.மாதவன்(86) உடல்நல்க் குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார்.

ஆ.மாதவன் 1934ல் திருவனந்தபுரத்தில் பிறந்தார். அவரது தந்தைபெயர் ஆவுடைநாயகம் பிள்ளை. தாயார் செல்லம்மாள். ஆ.மாதவனின் தந்தையின் ஊர் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை. தாயின் ஊர் நாகர்கோயில். பள்ளிப்படிப்பை முடித்த ஆ.மாதவன் மேலே படிக்கவில்லை. திராவிட இயக்க ஆதரவாளராக எழுத ஆரம்பித்தார். அவரது முதல் கதை 1955ல் ’சிறுகதை’ இதழில் வெளியாகியது. பின்னர் மலையாளம் வழியாக நவீன இலக்கிய அறிமுகம் பெற்று தீவிர இலக்கியதளத்தில் செயல்படலானார். அவரது முதல் சிறுகதை மோகபல்லவி. கடைத்தெருக்கதைகள் இவருக்குப் புகழைத்தேடித்தந்தது.

ஆ.மாதவன் திருவனந்தபுரம் சாலைத் தெருவில் செல்வி ஸ்டோர் என்ற பாத்திரக் கடையை 75 வயது வரை நடத்திவந்தார். சாலைத் தெருவை பின்னணியாகக் கொண்டே அவரது பெரும்பாலான கதைகள் அமைந்திருந்தன. விமர்சகர்களால், கடைத்தெருவின் கதைசொல்லி என்று அழைக்கப்படுகிறார்.

1974ல் ஆ.மாதவனின் முதல் நாவலான ’புனலும் மணலும்’ வெளிவந்தது.கரமனையாற்றில் மணல் அள்ளும் ஒரு குடும்பத்தின் கதை அது. அந்நாவல் அதன் யதார்த்தத்துக்காகப் பெரிதும் கவனிக்கப்பட்டது. 1982ல் வெளிவந்த கிருஷ்ணப்பருந்து தான் ஆ.மாதவனின் மிகச்சிறந்த நாவல் என்று விமர்சகர்களால் சொல்லப்படுகிறது. 1990ல் அவரது மூன்றாம்நாவலான ’தூவானம்’ வெளிவந்தது.

writer.a madhavan

மாதவன் மொழிபெயர்ப்பாளரும்கூட. 1974ல் அவர் காரூர் நீலகண்டபிள்ளை எழுதிய சம்மானம் என குறுநாவலை தமிழாக்கம் செய்தார்.

இவரின் இறப்பை கேட்ட கமலஹாசன், “புனலும் மணலும்”,”கிருஷ்ணப் பருந்து” உள்ளிட்ட அற்புதமான படைப்புகளைத் தந்த மகத்தான எழுத்தாளர் ஆ.மாதவனின் மறைவுக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.கடைத்தெருவின் கலைஞனுக்கு என் அஞ்சலி என்றார்.

இவர் எழுதிய சில முக்கிய சிறுகதைகள்:

Top