Main Menu

What’s New?

Connect With Us

தீபாவளி பண்டிகையில் ரூ.466 கோடி மது விற்பனை|இது சாதனையா என்ன?

Read Carefully

SHARES

தீபாவளி பண்டிகையையொட்டி 2 நாட்களில் மட்டும் தமிழகத்தில் ரூ.466 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.இது கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிடுகையில் பல மடங்கு அதிகமாம்.ஆங்கில புத்தாண்டு,பொங்கல்,தீபாவளி போன்ற பண்டிகை காலத்தின் போது மது பிரியர்கள்,மன்னிக்கவும்.குடிகாரர்கள்,விஸ்கி,பிராந்தி,ரம்,வொட்கா மற்றும் பீர் போன்ற மதுபானங்களை வாங்கி உற்சாகமாக அருந்து வது வழக்கம்.பண்டிகை காலத்துக்கு முன்பும்,பண்டிகை தினத்தன்றும் குடிகாரர்கள்,மதுக்கடைகளுக்கு சாரை சாரையாக படையெடுப்பார்கள்.இதனால் மது கடைகளில் கூட்டம் அலைமோதும்.அதே போல் வருட வருடம் தீபாவளி பண்டிகையின் போது குடிகாரர்களின் வசதிக்காக தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளிலும் மதுபானகள் தேவையான அளவுக்கு இருப்பு வைக்கப்படும்.

அந்த வகையில் தீபாவளி பண்டிகைக்கு முந்தைய தினமான கடந்த 13தேதி மட்டும் தமிழக முழுவதும் “டாஸ்மாக்” கடைகளில் ரூ.227.88 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது.மதுரை மண்டலத்தில் அதிகபட்சமாக ரூ.51.25 கோடி வசூல் ஆகியுள்ளது.இதற்கு அடுத்தபடியாக திருச்சி மண்டலத்தில் ரூ.43.26கோடியும்,கோவை மண்டலத்தில் ரூ.41.75 கோடியும் விற்பனை நடந்துள்ளது.இதே போல் தீபாவளி தினத்தன்று தமிழக முழுவதும் ரூ.237.91 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.அதிகபட்சமாக மதுரையில் ரூ.52.57 கோடிக்கு வியாபாரம் நடந்துள்ளது.சென்னையில் ரூ.50.11 கோடியும்,திருச்சியில் ரூ.48.10 கோடியும்,சேலத்தில் ரூ.44.32 கோடியும்,கோவையில் ரூ.42.81 கோடியும்,ஆக இருதினங்களில் மட்டும் ரூ.465.79 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

பொதுவாக தீபாவளி மது விற்பனை 3 நாட்களை அடிப்படையயாக கொண்டு கணக்கிடப்படுகிறது.அதன்படி,கடந்த 2016ல் ரூ.330கோடியும்,2017ல் ரூ.282கோடியும்,2018ல் ரூ.325கோடியும்,2019ல் ரூ.455கோடியும்,விற்பனை ஆகியுள்ளது.2020ல் ரூ.466 கோடி அதாவது கடந்த ஆண்டை விட சற்று அதிகம் தான்.இப்படியாக ஆண்டுக்கு ஆண்டு மது விற்பனை பண்டிகை காலங்களில் அதிகரித்து வருகிறது. பண்டிகை காலங்களை தவிர்த்து,பொதுவாகவே மதுவின் விற்பனை அதிகரித்து வருகிறது.இவைகள் எல்லாம் சாதனைகளா என்ன?பண்டிகை காலத்தில்,மது அருந்தி வாகனங்கள் ஓட்டி விபத்தாகி,உயிரிழந்தோர் எண்ணிக்கை?…?….?…எத்துணை வீட்டில்,வீட்டின் தலைவன் இதனால் இறந்து நடுத்தெருவுக்கு குடும்பம் வந்துள்ளது,அதன் எண்ணிக்கை?….?….?…சரி இது ஒருபுறமிருக்க….

இத்தனை கோடி அரசுக்கு வருவாய் வந்துள்ளது,இதனை வைத்து அரசு என்ன நல்ல திட்டங்களை செயல்படுத்த போகிறது?தமிழகம்,கல்வி,மருத்துவம்,வேலைவாய்ப்புகள் போன்ற அனைத்து துறைகளிலும் இன்று முன்னேறி உள்ளது,மாற்றுக்கருத்தில்லை.சமீபத்தில்,தஞ்சையில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின் அவல நிலையை கண்டு,நடிகை ஜோதிகா உதவி செய்துள்ளார்.இது போல் பல அரசு மருத்துவமனைகள் இருக்கத்தான் செய்கின்றன,இதனை நாம் மறுக்கமுடியாது.இதனை சரிசெய்ய இன்னொரு நடிகை வரவேண்டுமாயென்ன?தனியார் தொண்டு நிறுவனங்கள்,உண்மையான சமூக ஆர்வலர்கள்,போன்றவர்கள் செய்யும் சேவையை விட அரசு செய்யவில்லை என்பதைவிட,இன்னும் செய்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

மேலும்,மதுக்கடைகளை படிப்படியாக குறைக்கப்படும் என்று அரசு கூறியுள்ளது.படிப்படியாக என்றால் எத்தனை ஆண்டுகளுக்குள்?டாஸ்மாக் கடைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களின் மறுவாழ்வு? போன்ற அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி அரசு யோசித்ததா?போன்ற கேள்விகள் நம் மனதில் எழுகிறது.ஆகையால்,அரசு இதனை கருத்தில் கொண்டு வரும் காலங்களில் திட்டம் வகுக்க வேண்டும்.

Top