Main Menu

What’s New?

Connect With Us

RRR – படத்தின் டீஸர் வெளியானது : JR. NTR கொமரம் பீம்.

Bheem
Read Carefully

SHARES

RRR – படத்தின் டீஸர் வெளியானது : JR. NTR  கொமரம் பீம். பாகுபலி படத்திற்கு பிறகு ராஜமௌலி பிரம்மாண்டமாக இயக்கும் படம் “RRR”. இப்படத்தில்,          ராமச்சரன் தேஜா அவர்கள், அல்லூரி சீதாராம ராஜூவாக நடிக்கிறார். ஜூனியர் NTR, கொமரம் பீமின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

 
 
கொமரம் பீம் தெலுங்கானாவில், அல்லூரி சீதாராம ராஜூ ஆந்திராவிலும் பிறந்தனர். இருவரும், இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னர் நிஜாம் அரசர்களுக்கு எதிராக போர்க்கொடி ஏந்தியவர்கள். இவர்களின் வாழ்க்கை வரலாற்று படம் தான் “RRR”.  இதற்கு தமிழில் “ரத்தம், ரணம், ரௌத்திரம்” என பெயரிட்டுள்ளனர். 
 
இப்படத்தில்,  நடிகர் அஜய் தேவ்கான், அலியாபட், ஸ்ரேயா சரண், மற்றும் இயக்குனர் சமுத்திரக்கனி ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் பிரிட்டிஷ் நடிகை ஒலிவியா மோரிஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 
 
இப்படத்தின், முதல் அறிமுக டீஸர் ஆறு மாதங்களுக்கு முன்னதாக வெளியிடப்பட்டது. அதில், ராம் சரண் அவர்களின் கதாபாத்திரம்  “அல்லூரி சீதாராம ராஜூவின்” அறிமுக டீஸராக அமைந்தது. அது ராம் சரண் பிறந்தநாள் சிறப்பாக வெளியிடப்பட்டது.  அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. 
 
 

 
 
 
தற்போது, ஜூனியர் NTR -ன் கதாபாத்திரமான கொமரம் பீமின் அறிமுக டீஸர் வெளியாகியிருக்கிறது. இதற்கும் சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
 
என்டிஆரின் கொமரம் பீம் டீஸரை வெளியிட்டுள்ளனர். ராம் சரணின் குரலில் அறிமுக உரை வெளியாகிறது.
 
கொமாரம் பீமின் குரலாக, மெகா பவர் ஸ்டார் ராம் சரண் திரையில் கர்ஜிக்கிறார். 
 
“அவன் எதிரே நின்னா கடல் புயலே அடங்கும்..
 
பேரச் சொன்னா சிகரத்துக்கே தொடை நடுங்கும்..
 
அவன் இதயத்துடிப்பு கொடியோட படபடப்பு..
 
அவனோட திமிரு இருட்ட வேட்டையாடுற கதிர்
 
பூமியோட தாய்ப்பால் குடிச்சு வளர்ந்தவன்
 
புரட்சியாய் எழுந்தவன்..
 
என் தம்பி
காட்டுக் கரும்புலி- கொமரம் பீம்……”
 
 
Ram charan
 
 
 
 
இப்படியாக, பீமுக்கு, ராமச்சரன் அறிமுக குரல் கொடுத்துள்ளார்.
 
 
இத்திரைப்படம், தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளில் வெளியிடப்படுவதால் ராம் சரண் குரலிலேயே அனைத்து மொழிகளிலும் அறிமுக உரை வெளியாகிறது. படத்தை டிவிவி தனய்யாவின் இவிவி என்டெர்டெய்ன்மென்ட் எல்எல்பி நிறுவனம் தயாரிக்கிறது. பாகுபலி படத்திற்கு இசையமைத்த  கீரவாணி அவர்கள் இப்படத்திற்கும்  இசையமைத்துள்ளார்.
 
2020 -லேயே இப்படம் வெளியாவதாக இருந்தது. கொரோனா இடையூறால் படப்பிடிப்பு தள்ளிப்போய்கொண்டே இருக்கிறது. மீண்டும் இப்படத்தின் பாபிடிப்பு தொடங்கியுள்ளது. அடுத்த வருடம் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
 
 
 
 
Top