தினம் ஒரு குறள்:
திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள்,மக்களுக்கு பல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தது.அதன் வரலாறுகளையும்,1330 திருக்குறள்களையும் தினமும் காண்போம்…
குறளானது, ஈரடிகளில் உலகத் தத்துவங்களை சொன்னதால், இது ‘ஈரடி நூல்’ என்றும், அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டதால், ‘முப்பால்’ என்றும் அழைக்கப்படுகிறது.
*அறத்துப்பால்:
➜பாயிரம்:
2.) வான் சிறப்பு:
17.) நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்
பொருள்:
மேகம் கடல் நீரை முகர்ந்து கொண்டு,அந்நீரையே மழையாகப் பெய்கிறது.அவ்வாறு பெய்யவில்லையென்றால்,கடலிலுள்ள வளங்கள் கூட குறைந்து விடும்.
மேலும் படிக்க: மழை தவறாது பெய்வதால் இந்த உலகம் வாழ்ந்து வருகின்றது…..|தினம் ஒரு குறள்: