90 களின் சாக்லேட் பாய் “அப்பாஸ்” : திரைத்துறையிலிருந்து விலகியது ஏன்?

tamil actor abbas

90 களில் இளம் பெண்களின் கனவு நாயகனாக திகழ்ந்தவர் அப்பாஸ். தமிழில்  ‘காதல் தேசம்’, ‘வி.ஐ.பி.’, ‘பூச்சூடவா’, ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’, ‘பூவேலி’, ‘ராஜா’, ‘படையப்பா’, ‘ஆனந்தம்’, ’த்ரீ ரோஸஸ் போன்ற படங்களில் நடித்திருந்திருந்தார்.

10-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக  நடித்திருந்தார். 2016  ஆம் ஆண்டு வரை ஒருசில படங்களில் நடித்த அவர் அதன், பிறகு படிப்படியாக திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து முழுக்கு போட்டுவிட்டார்.

abbas family

தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களிலும் நடித்திருந்தார். கடைசியாக 2016-ம் ஆண்டில் வெளியான ‘பஞ்சக்கலம்’ என்னும் மலையாளத் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு திடீரென்று தமிழ்த் திரையுலகத்தில் இருந்து காணாமல் போனார். சில நாட்களில் இந்தியாவில் இருந்தே குடும்பத்துடன் வெளியேறிய அப்பாஸ், ஆஸ்திரேலியாவில் குடியேறியதாக வெளியாகியது.

actor abbas

பிறகு, அங்கிருந்து நியூஸிலாந்துக்குக் குடியேறியிருக்கிறார். நியூஸிலாந்தில் ஒரு Multi Corporate  நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். தென்னிந்திய சினிமாக்களில் ஹீரோவாக நடித்துவிட்டு எங்கோ தொலை தூரத்தில் இருக்கும்  நாட்டில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறார் என்பதே யாராலும் ஜீரணிக்க முடியாத விஷயமாக இருந்தது. தன்னை யாரும் தொடர்பு கொள்ள முடியாதபடி அவர் தன்னை வைத்துக் கொண்ததாக கூறப்படுகிறது. 

திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து தான் விலகியது குறித்து 5 வருடங்களுக்கு பிறகு பதிலளித்துள்ளார் அப்பாஸ்.  

அப்பாஸ் கூறியது பின்வருமாறு : 

ஒரு கட்டத்தில் அவருக்கு திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து ஆர்வம் குறைந்ததாகவும். சினிமா துறை போர் அடித்ததாகவும் கூறியுள்ளார். மனம் விரும்பாத விஷயத்தில் இருந்து விலகிட நினைத்ததாகவும் கூறியுள்ளார்.   சினிமா துறையை விட்டு அவர் விலகியதற்கு காரணமாக இதனை கூறியுள்ளார். 

abbas actor

90 களின் சாக்லேட் பாயாக திகழ்ந்த அப்பாஸ் மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதை தொடங்கினால் அவரது பயணம் சிறக்க Chennaiyil.com சார்பாக வாழ்த்துகிறோம். 

Also Read: ஆரியின் அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் : இதெல்லாம் எப்போ நடித்தார்?

Follow us on Facebook and Instagram:

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top