நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் கட்சி தொடங்க உள்ளார்.அதன் தேதி அறிவிப்பு இம்மாதம் 31ம் தேதி ரஜினி அறிவிக்க உள்ளார்.இந்நிலையில்,கட்சியின் பெயர் “மக்கள் சேவை கட்சி” என்றும் “ஆட்டோ” சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதனால்,அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.ரஜினியும் கட்சி தொடங்குவதற்கான பணிகளை முழு மூச்சில் செய்து வருகிறார்.மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை,புதிய கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு என ரஜினி பரபரப்பாக இருக்கிறார்.
நடிகர் ரஜினி,“மக்கள் சேவை கட்சி” என்ற பெயரில் புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதே போல் பாபா முத்திரை சின்னத்தை கேட்ட நிலையில் “மக்கள் சேவை கட்சி”க்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.ஏற்கனவே ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா ரஜினியின் கட்சியை பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.