இரு திராவிட கட்சிகளுக்கு மாறாக யாராவது கட்சி தொடங்க மாட்டார்களா,தமிழ் நாட்டிற்கு நல்லது நடக்காதா என்று பலரும் ஏங்கினார்கள்.அதற்கு ரஜினி கட்சி தொடங்கினால் நன்றாக இருக்கும் என்று அவரது ரசிகர்களும் மாற்று அரசியலை விரும்பும் மக்களும் நினைத்தார்கள்.1995ல் வெளி வந்த “பாட்ஷா” திரைப்படம் ரஜினிக்கு உலகளவில் புகழை வாங்கிக்கொடுத்தது.இதனால்,ரஜினியை பலரும் அரசியலுக்கு அழைத்தனர்.அனைத்து அழைப்பையும் மறுத்தார் ரஜினி.ஆனால்,தனது நெருங்கிய நண்பரும் தனது அரசியல் வழிக்காட்டியவுமான சோராமஸ்வாமியின் அழைப்பின் பெயரில் திமுக,தமாக,ஆகிய காட்சிகளை ஆதரித்தார்.அந்த தேர்தலில் திமுக அபார வெற்றியைக்கண்டது.இதற்கு ரஜினியின் பங்கு உள்ளதாக அன்றைய ஊடகங்களும்,அரசியல் செயல்பாட்டாளர்களும் கருத்து தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து ரஜினியை மீண்டும் அரசியலுக்கு அழைத்தனர்.காதில் வாங்காது,தொடர்ந்து சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.
“அரசியலுக்கு வருவீர்களா? என்ற கேள்விக்கு,ரஜினி,கையை மேலே உயர்த்தி,ஆண்டவன் கட்டளை இட்டால்….! என்ற மழுப்பல் பதில்களே கூறி வந்துள்ளார்.ஆனால் அவ்வப்போது,அரசியல் பஞ்ச்,அரசியல் சம்மந்தப்பட்ட காட்சிகளும் வசனங்களும் இடம்பெரும்.”பாபா” திரைப்படம் ஓடினால் நான் அரசியலுக்கு வருவேன் என்று அதிரடித்தார்.படம் ஓடவில்லை,ரஜினி அமைதியானார்.”இரு திராவிட கட்சியின் தலைவர்கள் இருக்கும் வரை நான் அரசியலுக்கு வரமாட்டேன்,என்று பேட்டி அளித்ததாக கேள்வி.காலம்,இரு திராவிட தலைவர்களையும் அழைத்துக்கொண்டது.தமிழக அரசியலில் வெற்றிடம் உருவானது.நான் நீ..என்று போட்டிபோட்டுக்கொண்டு கட்சிகளை தொடங்கின.பல நடிகர்,நடிகைகள் அரசியலில் இணைந்தனர்.இப்படி இருக்க,ரஜினி மட்டும் விதி விளக்காயென்ன?….2017ல் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில்,வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் நிற்பேன் என்ன ஆச்சரியப்படுத்தினார் ரஜினி.இந்த அறிவிப்பினை அடுத்து ரஜினியின் ரசிகர்கள் குதுகலமானார்கள்.தெளிவான முடிவு,மிக சரியான நேரம் என அனைத்து தரப்பு மக்களும் ஏன்…பல தமிழக கட்சிகள் கூட வரவேற்றார்கள்.
ஆனால்,என்ன பிரச்சனையோ,என்ன குழப்பமோ ரஜினி மீண்டும் மௌனமானார்.தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கினார்.சரியாக ஒரு வருடம் சட்ட சபை தேர்தல் வர இரு ந்தநிலையில்,கொரோனா வந்துவிட்டது.ரஜினியின் அரசியல் நிலைப்பாட்டினை அறியாத நிலை ஏற்பட்டது.இதற்குள் ரஜினியின் உடல் நிலைக்குறித்தும்,அரசியல் நிலைப்பாட்டினைக்குறித்தும் கடிதம் ஒன்று ஊடகங்களில் உலாவந்து.இது குறித்து பேசிய ரஜினி,எனது உடல்நிலைக்குறித்து வந்த தகவல்கள் அனைத்தும் உண்மையே ஆனால்,அதில் கூறப்பட்டுள்ள அரசியல் குறித்த செய்தியானது உண்மையில்லை என்று கூறினார்.ரஜினி இனி அரசியல் தொடங்கமாட்டார்,தேர்தல் வர இன்னும் 6 மாதகாலமே உள்ளது.ரஜினியின் உடல் நிலை கருத்தில் கொண்டு,அவரால் மக்களை சந்தித்து பேசமுடிவுமா? ஓட்டுக்களை பெற முடியுமா?என்று பலரும் பேசினார்.இதானால்,தனது அரசியல் நிலைப்பாட்டின் தெரிவித்தே ஆக வேண்டும்,என்கின்ற கட்டாயத்தில் ரஜினி தள்ளப்பட்டார்.
ஏற்கனவே ரஜினி மக்கள் மன்ற செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய ரஜினி,மீண்டும் ஆலோசனைகளை நடத்த திட்டமிட்டார்.இதனை தொடர்ந்து,நேற்று ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில்,மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனைகளை நடத்தினார்.இதில்,வரும் சட்டமன்ற தேர்தலில் நாம் களம் காண வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் கோரிக்கைவிடுத்தனர்.தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் தனித்து போட்டியிடலாம் அல்லது கூட்டணிகளோடு போட்டி இடலாமா என்பது குறித்து ரஜினி கேட்டறிந்தார்.அதே போல்,அரசியல் கட்சி தொடங்குவது குறித்தும் தாமே முடிவெடுப்பதாக ரஜினி கூறிஉள்ளார்.சில மாவட்ட செயலாளர்கலின் செயல் பாடுகள் குறித்து அதிருப்தியும் தெரிவித்துள்ளார்,ரஜினி.
மக்கள் மன்றத்தை வலுப்படுத்த சொல்லியும்,நடவடிக்கை இல்லை என்றும்,தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.பல நிர்வாகிகளை,மாற்றிவிடலாமா என்கின்ற நிலைக்கு தான் தள்ளப்பட்டேன்,என்றும் எச்சரித்தார் ரஜினி.இன்னும்,நாம் கடுமையாக உழைத்தால் மட்டுமே அடுத்தக்கட்டத்திற்கு செல்வோம் என அறிவுரை கூறினார்.அதன் பின்னர் 11 மணியளவில்,தனித்தனியாக மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினார்,ரஜினி.பிறகு போயஸ் கார்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஜினி,தனது அரசியல் நிலைப்பாட்டினை குறித்து விரைவில் வெளியிடுவேன் என கூறினார்.
ரஜினியின் அடுத்த மூவ்…..
1.)அரசியல் தொடங்கி மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்பதே ரஜினியின் எண்ணம்.அது, தற்போதுள்ள அரசியல் தலைவர்களுக்கே நன்கு தெரியும்.
2.)கட்சி தொடங்கினால் வெற்றி பெற வேண்டும் என்பது ரஜினியின் அடுத்த இலக்கு,அதற்காகவே இந்த தாமதம்.
3.)கட்சி தொடங்கினால்,தலைமை மட்டும் ஒழுங்காக இருந்தால் போதாது,கட்சியில் இருக்கும் அனைவரும் ஒழுங்காக இருக்க வேண்டும்.இது சாத்தியமா?
4.)கட்சிக்கு நானும்,ஆட்சிக்கு சகாயம் போன்றவரை நியமித்தால்,ரசிகர்களின் மனநிலை என்ன?இதனை ஏற்பார்களா?
5.)தனித்து நிற்பதா அல்லது கூட்டணியுடன் நிற்பதா?
போன்ற யோசனைகளோடு ரஜினியின் அடுத்த மூவ் இருக்கும்.
50 சதவீதம் ரஜினி கட்சி தொடங்குவது உறுதியாகிவிட்டது.அதே போல் 50 சதவீதம் நபர்கள் ரஜினியை ஆதரிப்பார்கள் என்பதும் உருதியாகிவிட்டது.எது எப்படியோ…..ரஜினி எந்த முடிவு எடுத்தாலும்,விரைவில் அறிவிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்புகள்…!