Main Menu

What’s New?

Connect With Us

PRABHU DEVA ரகசிய திருமணம் : PHYSIOTHERAPY டாக்டரை மணந்தார்.

prabhudeva marriage
Read Carefully

SHARES

நடிகர் PRABHU DEVA  ரகசிய திருமணம் செய்துள்ளார். நடன இயக்குநராகிய சுந்தரம் மாஸ்டரின் மூன்று மகன்கள் ராஜு சுந்தரம்,பிரபு தேவா மற்றும் நாகேந்திர பிரசாத். இதில், பிரபுதேவா அவர்கள் நடன கலைஞராக அறிமுகமாகி, தற்போது இந்தி திரைப்பட உலகில் தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வருகிறார். பின்பு, நடன இயக்குனராக தனது பயணத்தை தொடர்ந்த இவர் தமிழ் திரையுலகம் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்தார். இவரது நடனத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் உண்டு.

prabhudeva

நடனம் மட்டுமின்றி நடிப்பிலும் தனது அழுத்தமான முத்திரையை பதித்தார். தெலுங்கில் தனது இயக்குனர் அவதாரத்தை தொடங்கினார் PRABHU DEVA. பிறகு, தமிழில் விஜய் நடித்த போக்கிரி படத்தின் மூலம் தமிழில் இயக்குநரானார். பிறகு, ஹிந்தியில் அறிமுகமாகி தற்போது சல்மான் கானை வைத்து “ராதே” படத்தை எடுத்து வருகிறார்.  தற்போது, ஹிந்தி திரையுலகில் தவிர்க்க முடியாத கமர்ஷியல் இயக்குனராக உள்ளார். இவர் ஹிந்தியில் கடைசியாக எடுத்த படம் “தபாங் 3”.  அவர் தனது நடன தொழிலையும் சிறப்பாக செய்து வருகிறார். குறிப்பாக, மாரி 2 படத்தின் “ரவுடி பேபி” பாடல் YOUTUBE -ல் 1 பில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. மேலும்,  “பொன் மாணிக்கவேல்” திரைப்படம் அவர் நடிக்கும்  50 -வது திரைப்படமாகும்.

பிரபு தேவாவுக்கு கடந்த 1995 – ஆம் ஆண்டு “ரமலதா” என்பவருடன் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இதில் முதல் குழந்தையான 12 வயது மகன் மூளை கோளாறால் 2010 -ஆம் ஆண்டு உயிரிழந்தார்.   இதற்கிடையில் நடிகை நயன்தாராவுடன் சில கிசுகிசுக்கள் ஏற்பட்டது. கடநத 2010, 2011 ஆம் ஆண்டு வாக்கில் நடிகை  நயன்தாராவும், பிரபுதேவாவும் திருமணம் செய்ய போவதாக  ஊடகங்களில் தகவல் கசிந்தது. இதனை, எதிர்த்த மனைவி ரமலதாவுக்கும் பிரபுதேவாவுக்கு மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால், கடந்த 2011 -ஆம் ஆண்டு பிரபுதேவாவுக்கு, ராமலதாவுக்கும் விவாகரத்து ஆனது. 

prabhudeva dance

அதன்பிறகு, திரையுலகில் கவனம் செலுத்தி வந்த PRABHU DEVA சமீபத்தில் ரகசிய திருமணம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில், உள்ள தனது இல்லத்தில் தனது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்ததாக தெரிகிறது. பிரபுதேவா சில நாட்கள் முதுகுவலி காரணமாக மும்பையில் தங்கி பெண் பிசியோதெரபி மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சை பெற்றதாகவும். அதன்மூலம், அந்த மருத்துவருடன் காதல் ஏற்பட்டதாகவும். அந்த டாக்டர் பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும். நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களை மட்டும் வைத்து திருமணம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திருமணம் பற்றிய வேறு தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. பல திரையுலக நட்சத்திரங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். 9 வருடங்களுக்கு பிறகு பிரபுதேவா இந்த திருமணம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு வயது 47.

 

Read Also : லேடி சூப்பர் ஸ்டார் “NAYANTHARA” : 36 வது பிறந்தநாள் : VIGNESH SHIVAN.

Follow us on Facebook and Instagram:

Top