மீண்டும் வரலாற்று படத்தில் பிரபாஸ் : இயக்குனர் இவரா?

பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸின் இமேஜ் மாறி விட்டது. Pan Indian நடிகர் அந்தஸ்தை பெற்றுவிட்டார். மிகப்பெரிய பொருட்செலவில் உருவான இப்படம் 1000 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டியது.

அடுத்ததாக “சாஹோ” படத்தில் நடித்தார். அது எதிர்பார்த்தது போல் வசூல் ஈட்டவில்லை. அதன்பிறகு, மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் ராதே ஷியாம், ஆதிபுருஷ், போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

அதன் பின்பு பிரபாஸ் நடிக்ககூடிய திரைப்படங்கள் அனைத்து தரப்பு மக்களால் கவனிக்ககூடிய திரைப்படங்கள் ஆனது. தற்போது “KGF” இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ‘’சலார்’’ என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார்இதன் பிறகு மீண்டும் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ஒரு வரலாற்று திரைப்படத்தில் பிரபாஸ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்திரைப்படத்தை பாகுபலி போன்று பிரம்மாண்டமாக எடுக்க திட்டமிட்டுள்ளாதாகவும் பிரஷாந்த் நீல் முடிவு செய்துள்ளாராம்.

பிரபாஸின் 25வது திரைப்படமாக உருவாக இருக்கும் இத்திரைப்படத்தை பிரபல தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் தில் ராஜீ தயாரிக்க உள்ளார்.இந்த தகவல் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp

Also Read

Scroll to Top