பிரபல ஒளிப்பதிவாளர், இயக்குனருமான  கே.வி.ஆனந்த் கடந்து வந்த பாதை.

KV ANAND

பிரபல ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் காலமானார்.

* இவர் 1994-ல் வெளியான “தென்மாவின் கொம்பத்து” என்கின்ற மலையாள படத்தின் மூலம் ஒளிப்பதிவாளரானார்.

* இவர் பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராக பணியாற்றியுள்ளார்.

* தனது கல்லூரி காலத்தில் மாநில மற்றும் தேசிய அளவிலான புகைப்பட போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

* ஆனந்த விகடனில் புகைப்பட கலைஞராக பணியாற்றியுள்ளார்.

* கே.வி.ஆனந்த் “காதல் தேசம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஒளிப்பதிவாளராக அறிமுகமானார்.

* மேலும்,தமிழில் நேருக்கு நேர்,முதல்வன், பாய்ஸ் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

* இதுமட்டுமின்றி, தமிழில் 2005-ஆம் ஆண்டு வெளியான “கனா கண்டேன்” படத்தின் மூலம் அவதாரமெடுத்தார்.

* தொடர்ந்து அயன், கோ, மாற்றான், அனேகன், கவண், சமீபத்தில் வெளியான காப்பான் படங்களை இயக்கியுள்ளார்.

* அதில் சூரிய நடித்த அயன் படம் மிகவும் பிரபலம்.

* இவர் சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

* இந்நிலையில், நேற்று (30.04.2021) காலை 3 மணியளவில் மாரடைப்பால் காலமானார்.

இந்த செய்தி திரைத்துறையை உலுக்கியுள்ளது. அவரது உடலுக்கு திரைத்துறை பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். சமீபத்தில், நடிகர் விவேக் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் படிக்க:

 

 

 

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top