தமிழ் சினிமா வரலாற்றில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகும் படம் “பொன்னியின் செல்வன்”. இது கல்கி எழுதிய “பொன்னியின் செல்வன்” நாவலை மையப்படுத்தி எடுக்கபடும் படம் ஆகும். இந்த திரைப்படம் பல இயக்குனர்களின் கனவு படமாக அமைந்துள்ளது. தற்போது, இயக்குனர் மணிரத்னம் அவர்கள் அதனை சாத்தியமாக்கி வருகிறார்.

கொரோனாவுக்கு முன்பே இதன் படப்பிடிப்பு தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் தொடங்கப்பட்டு பின்பு கொரோனவால் தடைபட்டது. தற்போது மீண்டும் இதன் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி ராவ் சிட்டியில் பிரம்மாண்ட அரங்கு அமைத்து படமாக்கப்பட்டு வருகிறது. கடந்த புதன்கிழமை (06/01/2021) அன்று இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு சென்று படப்பிடிப்பு நடத்துவது தற்போது சாத்தியமில்லை என்பதால் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் தற்போதைய படப்பிடிப்பில் நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா போன்றோர் கலந்துகொள்கின்றனர். அடுத்தகட்ட படப்பிடிப்பில், நடிகர் விக்ரம் கலந்துகொள்ள இருக்கிறார். தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகிவரும் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். அதனை முடித்துவிட்டு பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார் விக்ரம். இதற்காக நடிகர்கள் நீண்ட நாட்களாக நீளமான தலைமுடி மற்றும் தாடியுடன் வளம் வருகின்றனர். கடந்த வாரம் ஒரு பாடலுக்கான நடன ஒத்திகை சென்னையில் நடைபெற்றது. இதனை, நடத்தியவர் பிரபல நடன இயக்குனர் பிருந்தா அவர்கள்.

மேலும், நடிகை ஐஸ்வர்யா ராய் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். நடிகர் சரத்குமார் இப்படத்தில் பழுவேட்டரையர் கதாபாத்திரத்திலும், அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை, மணிரத்னம் 2 பாகங்களாக எடுக்க இருக்கிறார். இந்தாண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படம் வெளியாக அதிக வாய்ப்பிருக்கிறது. ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பில் பிரமாண்டமாக பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட இருக்கிறது. மேலும், ஒரு தகவல் எனவென்றால் நடிகர் பார்த்திபன் இப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
பொன்னியின் செல்வன் கதை பெரும்பாலான தமிழர்களுக்கு பரிச்சயமான கதை என்பதால், அதனை ரசிக்கும் வகையில் மணிரத்னம் எவ்வாறு தயாரிக்க போகிறார் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
Also Read: திரையரங்குகளின் 100% சீட்களுக்கு எதிர்ப்பு | “மாஸ்டர்” வெளியாவதில் சிக்கல்.
Follow us on Facebook and Instagram: