Main Menu

What’s New?

Connect With Us

அரசியல் நிலைப்பாட்டு|மக்களிடம் தெரிவிக்கும் ரஜினி!

Read Carefully

SHARES

“இப்போ இல்லை நா எப்போவும் இல்லை” என்று ரஜினி சொன்ன வார்த்தை உண்மையாக நடைபெறப்போகுது.ஆம்! தற்போது ரஜினி அரசியல் விழும்பில் உள்ளார்.ரஜினியின் உடல் நலத்தை ப் பற்றியும்,அரசியல் பற்றியும்,ரஜினியே தன் நண்பருக்கு கடிதம் எழுதியதாக ஒரு தகவல் வெளியானது.”அதில்,கொரோனா காரணமாக நான் இது நாள் வரை வெளியே வரவில்லை,எனக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்துள்ளதாலும்,வயது 70தை தாண்டியதாலும்,இனி அரசியல் வேண்டாம் என தோன்றுகிறது.இப்படி அதில் குறிப்பிட்டுள்ளது.இதனால் ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள்.என்னது ரஜினி சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்துக்கொண்டாரா? என மக்களும் வாய் பொளந்தனர்.

இந்நிலையில் எனது உடல்நிலை குறித்து வந்த செய்தி உண்மைதான் ஆனால் அதில் கூறப்பட்டிருக்கும் அரசியல் உண்மையில்லை என்பது போல் ரஜினி தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.மேலும் எனது அரசியல் நிலைப்பாட்டினை மக்களோடு கூடிய விரைவில் பேசுவேன் எனவும் ரஜினி தெரிவித்தார்.இது ஒரு புறமிருக்க,ரஜினி சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்களை முன்னிருத்தி ரஜினி களம் இறங்கப்போகிறார்,தலைமைக்கு ரஜினியும்,ஆட்சிக்கு சகாயமும்,வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சந்திக்கப்போவதாக செய்திகள் வெளியாகின.அதற்க்கேற்ப சகாயம் அவர்களும் ராஜினாமா கடிதத்தை தலைமை செயலகத்திற்கு அனுப்பிவிட்டார்.இதனால் ரஜினியின் வருகை ஓரளவிற்கு ஊர்ஜிதமாகின.

தமிழகத்தில் அரசியல் மாற்றம் வராதா என்று காத்துக்கொண்டு இருந்த மக்களுக்கு இச்செய்தி மகிழ்ச்சியை கொடுத்தது.ஆனால் ரஜினி ரசிகர்கள் இதனை விரும்பவில்லை.காரணம் ரஜினிதான் முதல்வர் வேட்பாளராக இருக்கவேண்டும் என்பது அவர்களின் ஆசை.மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்பது ரஜினியின் பலநாள் எண்ணம்.ரஜினி அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக மக்களுக்கு நல்லதினை செய்வார் என்பதில் 80% ஐயமில்லை.இதனை அனைத்து தரப்பு அரசியல் கட்சிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர்.இது ரஜினிக்கும் நன்கு தெரியும்.பின்னர் ஏன் ரஜினி தயங்குகின்றார்? ரஜினி இன்னும் கட்சி தொடங்காததான் பின்னணி என்ன?ரஜினி ஒன்றை கூறினால் அதனை நிறைவேற்றே தீருவார்.

பின்னர் ஏன் தாமதம்?மதுரைலையிலோ,அல்லது திருச்சிலையிலோ கடந்த ஆகஸ்ட் மாதம் மாநாடு நடத்தி கட்சியின் பெயர்,கொடி,கொள்கை என அனைத்தையும் அறிவித்து ரஜினி கட்சி தொடங்குவதாக இருந்தது.ஆனால் கொரோனா காரணமாக இவைகள் அனைத்தும் ரத்தானது.மேலும் கொரோனா காரணமாக இனி நாம் கட்சியை தொடங்கமுடியுமா? மக்களிடம் பேசமுடியுமா? சந்திக்கமுடியுமா? தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்க்கொள்ள முடியுமா? போன்ற கேள்விகள் ரஜினி மனதிற்குள் எழும் கேள்வி.இக்கேள்வி நம்மனதிற்குள்ளும் எழுகிறது.இவையெல்லாம் தாண்டி ரஜினி இன்றும் அரசியல் ஆரம்பித்தால் கூட அரசியல் கட்சிகள் எல்லாம் நடுங்கும்.கூட்டணி வைக்க பலரும் விரும்புவார்கள்.அதைவிட புதிய அரசியல் மாற்றத்தை விரும்பும் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்.ரஜினிக்கு இனியும் காலம் இருக்கிறது.இது மட்டுமே உள்ளது,இதை விட்டால் வேற வாய்ப்புகள் இல்லை என்பதனை ரஜினிக்கு நினைவுப்படுத்துகிறோம்….

Top