Main Menu

What’s New?

Connect With Us

 20ல் பள்ளிகளை திறக்க திட்டம்|முதல்வர் ஒப்புதலுக்காக வைட்டிங்:

school-reopen
Read Carefully

SHARES

 20ல் பள்ளிகளை திறக்க திட்டம்|முதல்வர் ஒப்புதலுக்காக வைட்டிங்:

tamil-school

கொரோனா காரணமாக இதுவரை பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.ஆன்லைன் வகுப்புகள் மட்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்,பொங்கல் விடுமுறைக்கு பின் வரும் 20ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.பள்ளிகளை திறக்கலாமா? என்று அரசு,பெற்றோர்களிடம் கருத்து கேட்டது.

Tamil-School

இதில் பெருமான்மையான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க சம்மதம் தெரிவித்தனர்.மேலும் பெற்றோர்கள் தெரிவித்ததாவது,ஆன்லைன் வகுப்பில் பாடம் புரியவில்லை,மாணவர்களின் கண்கள் பாதிக்கப்படுகின்றன,தொழில்நுட்ப பிரச்சனைகள் ஏற்படுகின்றன,ஆசிரியர்களிடம் மாணவர்கள்  சந்தேகங்களை  கேட்க முடியவில்லை,தேசிய அளவில், நீட்,ஜே.இ.இ., போன்ற போட்டி தேர்வுக்கு தயாராக வேண்டிய நிலையில்,நிச்சயம் நேரடி வகுப்புகள் தேவை என பெற்றோர்கள் கூறினார்.

 tamil school online study

இதனை நன்கு ஆய்வு செய்த பள்ளிக்கல்வித்துறை பொங்கல் விடுமுறை முடிந்து வரும் 20ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளது.பொங்கல் விடுமுறைக்கு ஊர்களுக்கு  சென்ற மாணாக்களும் பெற்றோர்களும் மீண்டும் தங்கள் இல்லத்திற்கு வரவேண்டும்.பள்ளிகளை திறப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்யவேண்டும் இதனால் 20ம் தேதிக்கு பின்னர் பள்ளிகளை திறக்கலாம் என தலைமை ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tamilnadu school 254

இது குறித்து முதல்வருக்கு பள்ளிக்கல்வித்துறை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.எனவே முதல்வர் ஒப்புதல் அளித்ததும் முறைப்படி தேதிகளை அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: 6 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல்|மத்திய அரசு எச்சரிக்கை!

: திருவல்லிக்கேணியில் மாடுகளின் அட்டூழியம்|கண்டுக்காத மாநகராட்சி!

Top