2ம் கட்ட தடுப்பூசி| யாரெல்லாம் போட்டுக்கொள்ளலாம்?
இரண்டாம் கட்ட தடுப்பூசியை யாரெல்லாம் போட்டுக்கொள்ளலாம் என மத்திய அரசு தெளிவு படுத்தியுள்ளது. இதில், ‘கார்மாபி டைட்டிஸ்’ எனப்படும், இரண்டுக்கும் மேற்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டு, அதற்கு சிகிக்சை பெற்று வரும், 45 வயதிற்கு மேற்பட்டவர்கள், மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடி மக்கள் ஆகியோர் தகுதி பெறுவார்கள்.
எந்தெந்த நோயினால் பாதிக்கப்பட்ட, 45 வயதிற்கு மேற்பட்டவர்கள், கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளும் தகுதியை பெறுவர் என்ற பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மேலும், பல்வேறு அதிகாரிகளின் பரிந்துரையின் பெயரில், இந்த பட்டியலை தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியல் விபரம்:
✦ கடந்த ஓராண்டிற்குள் இதயம் சம்பந்தமாக பிரச்சனைக்காக மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டவர்கள்.
✦ இதய மாற்று அறுவை சிகிச்சை மற்றும் இதய செயல்பாடுக்கு செயற்கை கருவி பொருத்தப்பட்டவர்கள்.
✦ இதய, ‘வால்வ்’ கோளாறு உள்ளவர்கள்.
✦ இதய அறுவை சிகிச்சை செய்தவர்கள்.
✦ நெஞ்சு வலி, நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோய்களுக்கு, 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிகிச்சை பெறுபவர்கள்.
✦ பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.
✦ சிறுநீரகம், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், அறுவை சிகிச்சைக்கு காத்திருப்பவர்கள்.
✦ ‘டயாலிசிஸ்’ செய்து கொள்ளும், சிறுநீரக நோயாளிகள்.
✦ கல்லீரல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.
✦ கடும் சுவாசக் கோளாறுகளுக்காக, கடத்த இரண்டு ஆண்டுகளுக்குள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள்.
✦ புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.
✦ எச்.ஐ.வி., உட்பட, கடுமையான நோய் எதிர்ப்பு தட்டுப்பாடு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள்.
✦ மூளை வளர்ச்சி குறைபாடு, ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள், இரண்டுக்கும் மேற்பட்ட சவால்களை உடைய மாற்று திறனாளிகள், பிறர் உதவி பெரிதும் தேவைப்படும் மாற்று திறனாளிகள்.
மேற்குறிப்பிட்ட நோய்களினால் பாதிக்கப்பட்ட, 45-59 வயது வரையிலானவர்கள், அது குறித்து டாக்டரிடம் சான்றிதழ் பெற்று, தடுப்பூசி போட்டுக்கொள்ள விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:
அரசு பேருந்துகளில் போஸ்டர் ஒட்டும் அதிமுக|அதிகாரம் துஷ்பிரயோகம்!