பெட்ரோலின் விலை அதிகமாச்சு|இப்போ எல்லாரும் இதுக்கு மாறப்போறாங்க!

பெட்ரோலின் விலை அதிகமாச்சு|இப்போ எல்லாரும் இதுக்கு மாறப்போறாங்க!

 பெட்ரோல்

இன்றைய சூழலில், பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. லிட்டருக்கு 90ரை எட்டிவிட்டது. போதும்டா சாமி இனிமேல் நமக்கு வண்டியே வேண்டாம். நாம் இனிமேல் சைக்கிளில் செல்லலாம் என்கின்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள்.

இந்நிலையில் கோவையில் “எலக்ட்ரிக் பைக்” தயாரிக்கப்பட்டு வருகிறது. எலக்ட்ரிக் பைக்கை தயாரித்துள்ள கோவையைச் சேர்ந்த இளைஞர் மோகன்ராஜ் ராமசாமி அவர்கள் கூறியதாவது:

படித்தது, வளர்ந்தது எல்லாம் பொள்ளாச்சி தான். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மீது ஆசை, ஆனால் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் தான் படிக்க முடிந்தது. படித்து முடித்ததும் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வேலை பார்த்தேன். அதன் பின், அமெரிக்க சென்றுவிட்டேன். அங்கு டெஸ்லா நிறுவனத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.

இளைஞர் மோகன்ராஜ் ராமசாமி
இளைஞர் மோகன்ராஜ் ராமசாமி

ஐ.டி.,  ஆபரேஷன்ஸ் டீமில் இருந்தேன் டெஸ்லா உரிமையாளர் எலான் மஸ்க்கின்  அணுகுமுறை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அங்கு தான் என் இயந்திரவியல் மூளைக்கு தீனி கிடைத்தது. இந்த உலகத்தில் 20 ஆண்டுகளுக்கு ஒரு தொழில்நுட்பம் வளர்ச்சி அடையும். இப்படித்தான் நான்கு சக்கர வாகனத் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை போன்றவை வளர்ந்தன.

அந்த வகையில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு எலக்ட்ரிக் பைக் தயாரிப்புக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என நம்புகிறேன். அதிவேக பைக்கை தயாரிப்பது தொடர்பாக பிரபல நிறுவனங்கள் பல பல முயற்சிகளை எடுத்தன எனினும் யாராலும் வெற்றி பெற முடியவில்லை. அதற்குக் காரணம் இதில் பல சவால்கள் உள்ளன.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

அந்த வகையில் அந்த சவால்களை வெற்றிகரமாக நான் எதிர் கொண்டதால் இப்போது இந்தியாவிலேயே முதல் “ஸ்டார்ட் அப்” நிறுவனமான எங்களின் ஸ்ரீவாரு  மோட்டார்ஸ் நிறுவனம் எலக்ட்ரிக் பைக்கை தயாரிக்கிறது.

பார்ப்பதற்கு பெட்ரோல் பைக் போலவே இருக்கும் இந்த பைக் மணிக்கு 123 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. இவ்வளவு வேகத்தில் செல்லக்கூடிய எலக்ட்ரிக் வாகனத்தை சாதாரண நிறுவனங்கள் எதுவும் இதுவரை தயாரிக்கவில்லை.

எங்கள் தயாரிப்பின் பெயர் ‘பிராணா’! இந்த பைக்கை கோவையில் தான் உற்பத்தி செய்கிறோம் எலக்ட்ரானிக் பைக் என்பதால் எந்த இடத்திலும் சார்ஜ் செய்துகொள்ள வசதியான முறையை பின்பற்றுகிறோம். எல்லா இடங்களிலும் சர்வ சாதாரணமாக எல்லா வீடுகளிலும் இருக்கும் 15 ஆம்ஸ் பிளக் இருந்தால் போதும் சிறிது நேரத்தில் இந்த பைக்கை சார்ஜ் ஏற்றுக் கொள்ளலாம்.

prana

நிறைய பாதுகாப்பு அம்சங்களை இதில் பொருத்தி இருக்கிறோம் திடீரென பிரேக் போட்டால் வண்டியின் இன்ஜின் ஆப் செய்வது மாதிரியான ஏற்பாடுகள் உள்ளன. இதனால் எங்களின் வாகனம் விபத்தில் எளிதில் சிக்காது. நல்ல வேகம் இருக்க வேண்டும் என்பதை மனதில் இருத்தி இந்த பைக்கை தயாரித்துள்ளோம்.

இதில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியை மூன்று லட்சம் கிலோமீட்டருக்கு பயன்படுத்த முடியும். விரைவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரையும் அறிமுகப்படுத்த உள்ளோம். ‘அப்புறம் என்னங்க இனிமே பெட்ரோல் பைக்கிற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்’. அனைவரும் எலக்ட்ரிக் பைக் வாங்கிவிட்டால் பெட்ரோலின் விலை லிட்டருக்கு 50 ரூபாய்க்கு வந்துவிடும் என்பதில் துளிக்கூட சந்தேகமில்லை….

 

மேலும் படிக்க: 

 தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி வீணடிக்கப்படுகிறதா?

வேளச்சேரி ஏரி ஆக்கிரமிப்பு|அதிகாரிகள் அலட்சியம்

 

Follow us on Facebook and Instagram:

 

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top