கட்சி தொடங்கினார் அர்ஜுன மூர்த்தி|ரஜினி என்ன சொன்னாரு?
”இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி” என்று புதிய கட்சியை தொடங்கிய அர்ஜுனமூர்த்திக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.ரஜினியின் தொடங்கப்படாத கட்சியில் பணியாற்றியவர் பாஜக முன்னாள் நிர்வாகி அர்ஜுன மூர்த்தி. இவர் ”இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி” என்று புதிய கட்சியை தொடங்கி உள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் இந்த கட்சியின் தொடக்க விழா நடைபெற்றது. ”இது வேற லெவல் அரசியல், இது தமிழ்நாட்டின் விஸ்வரூப அரசியல், உண்மையான மாற்றத்தின் அரசியல்,தமிழ் மக்கள் முன்னேற்றத்திற்கு பயன்படும் அரசியல், இந்த கட்சிக்கு ஜாதி, மதம் இல்லை. ஆணவத்தால் வரும் மதமும் இல்லை.” தன் புதிய கட்சி குறித்து அர்ஜூனமூர்த்தி, இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த், 10 வார்த்தைகளில் அர்ஜுன மூர்த்திக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.’ அதில் ‘இன்று தனி அரசியல் கட்சித் துவங்கியிருக்கும் திரு.அர்ஜூன மூர்த்தி அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அர்ஜுன மூர்த்தி;
‘எனது இமமுக ஆட்சிக்கு வந்தால் 4 துணை முதல்வர் பதவி கொண்டு வரப்படும்.பள்ளி, கல்லூரி, மாணவ மாணவிகளுக்கு பஸ் பாஸ் உடன் இலவச பெட்ரோல் கார்டு தரப்படும்,’ என்றார்.
ஜெயலலிதா, கருணாநிதி, என்கின்ற இரண்டு ஆளுமைகள் இல்லாததால், தமிழகத்தில் ஆல்லாளுக்கு கட்சியினை தொடங்கி வருகின்றனர். இது எல்லாம் எங்கே போய் முடியுமோ??
மேலும் படிக்க:
அரசு பேருந்துகளில் போஸ்டர் ஒட்டும் அதிமுக|அதிகாரம் துஷ்பிரயோகம்!