10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது தமிழக அரசு.
தமிழகத்தில் இன்று முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவளின் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தன. இதுவரை, இணையவழி கல்வியே மேற்கொள்ளப்பட்டு வந்தது. பள்ளிகள் திறப்பு குறித்து கேள்வி வெகு நாட்களாக எழுந்துள்ளது.
அதன் முதற்கட்டமாக இன்று (19/01/2021) முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதற்கான கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
1. ஒரு வகுப்புக்கு 25 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும்.
2. பள்ளி வாகனங்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே மாணவர்கள் அமர்த்தப்பட்ட வேண்டும்.
3. பள்ளி வளாகங்களில் இருக்கும் உணவகங்கள் செயல்பட தடை.
4. மாணவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் உணவை பரிமாறிக்கொள்ள கூடாது.
5. முக்கியமாக, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
6. மாணவர்களின் வருகை பதிவிற்காக வரச்சொல்லி வற்புறுத்தக்கூடாது.
7. விருப்பமுள்ள மாணவர்கள் வகுப்பிற்கு வரலாம் என தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக 30 லட்சம் வைட்டமின் மாத்திரைகள் தயார் நிலையில் இருப்பதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Also Read: திடீர் ஞான உதயம்…..தேர்தல் வருத்துல!