Main Menu

What’s New?

Connect With Us

ஒரு நாள் மழைக்கே சென்னை மூழ்கியது|சென்னை மழை|

Read Carefully

SHARES

தமிழகத்தின் தலைநகரமாம் சென்னையில் நேற்று கன மழை கொட்டியது.இதில் சென்னையில் உள்ள பெருபாலான இடங்களில் மழை நீர் சாலைகளில் தேங்கி இருந்ததை நம்மால் பார்க்க முடிந்தது.குறிப்பாக கோயம்பேடு,விருகம்பாக்கம்,சேத்துப்பட்டு,ஜாபர்கான்பேட்டை,கீழ்கட்டளை,கோடம்பாக்கம்,மடிப்பாக்கம்,மேடவாக்கம்,மயிலாப்பூர்,போன்ற பகுதிகளில் குளம் போல தேங்கியது.சில இடங்களில் பல்லங்களை சூழ்ந்து மழை நீர் தேங்கி இருந்ததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளானார்கள்.இதனால் விபத்துக்கள் நடக்கும் அபாயமும் ஏற்பட்டது.சுதந்திரம் பெற்று 74 ஆண்டுகள் கடந்து விட்டன.இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அடிப்படை வசதிகள் கூட சரிவர பூர்த்திப்பட வில்லை என்பது வேதனை தரக்கூடிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

சென்னை மாநகரில் நீண்ட காலமாக சாலைகளை சரிவர பராமரிக்கப்படுவதில்லை.சென்னையை பொருத்தவரை சாலைகள் என்பது மிகவும் முக்கியம்,காரணம் அலுவலகத்திற்கு செல்ல,பேருந்துகள்,இரு மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்வோரின் எண்ணிக்கை அதிகம்.ஆனால் சென்னையில் பல இடங்களில் தரமற்ற சாலைகளே உள்ளன.ஆளுங்கட்சியினரின் நெருங்கிய வட்டாரங்களே சாலை வசதிகளை செய்ய டென்டர் மூலம் அவர்களுக்கு கொடுக்கப்படுகின்றன.இதனால் சாலைகள் தரமற்று இருக்கின்றன.இது ஒருபுறமிருக்க,மாநகராட்சிகள் இதனை கவனிக்க வேண்டாமா? மாநகராட்சிக்கு மக்களால் ஏகப்பட்ட வரிகள் வருகின்றன.அது போக வாகன ஓட்டிகள் “ரோடு டாக்ஸ்” கட்டுகிறார்கள், இத்தனை இருந்தும் சாலைகள் தரமற்று இருப்பதை என்னவென்று சொல்வது?

ஆனால் ஆட்சியாளர்கள்,அதிகாரிகள்,நீதிபதிகள்,சில முக்கிய புள்ளிகள் இருக்கும் இடங்களில் மட்டும் சாலைகள் அற்புதமாக காணப்படுகின்றன.ஏன்? சாமானிய மக்களின் மீது அக்கறையில்லையா?தரமான சாலைகளுக்காக மக்கள் இன்னும் எத்துணை ஆண்டிகள் காத்திருக்க வேண்டுமோ?சரி… நாம் இப்போது ரோட்டில் தேங்கியுள்ள மழைநீரைப்பற்றி பேசுவோம்.வீட்டுக்கு வீடு மழை நீர் சேமிப்பை பற்றி வலியுறுத்தும் அரசு,ரோட்டில் தேங்கிவுள்ள மழைநீரை சேமிக்க வேண்டும் என்று தோன்றவில்லை? ஆம்…ரோட்டில் தேங்கியுள்ள மழைநீரை சரியான முறையில் நவீன வசதிகளுடன் நிலத்தடிக்கு கொண்டுச் சென்று சேமித்தால்,கோடைக்காலங்களில் குடிநீர் பற்றாக்குறை வராமல் இருக்குமல்லவா?சாலையில் மழைநீர் தேங்கும் அளவிற்கு சாலைகளை அமைத்த இன்ஜினியர் யார்?அவர் எந்த கல்லூரியில் படித்தார்?என்பது போன்ற கேள்விகள் நகைச்சுவையாக கேட்கத்தோன்றுகிறது.

சாலைகளில் மழைநீர் தேங்கி இருந்தால் “ரோடு இன்ஸ்பெக்டர்” அதனை கண்காணித்து நடவடிக்கைகளை மேக்கொள்ள வேண்டும்.அவர் என்ன செய்கின்றார் என்பதே தெரியவில்லை.அது போக ஏரியா கவுன்சிலர்,ஊர் எம்.எல்.ஏ,எம்.பி இவர்களும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவர்களுக்கு மாதம் தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கப்படுகிறது.இந்த தொகையினை எம்.எல்.ஏ,எம்.பி என்ன செய்கின்றார்கள்?சரியான முறையில் நிதியை பயன்படுத்திகிறார்களா? அப்படி பயன்படுத்தினால் ரோட்டில் மழை நீர் தேங்குமா? போன்ற கேள்விகள் நம் மனதில் எழுகின்றன.இனி வரும் காலம் மழைக் காலம் என்பதால் சென்னையில் அதிகளவில் மழைக்கு வாய்ப்புள்ளது.அதனால் இனியாவது அரசு நடவடிக்கைகளை எடுக்குமா? சாலைகளில் மழைத்தண்ணீர் தேங்கி இல்லாதவாறு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?கண்டிப்பாக எடுக்க வேண்டும்.அபாயங்களை தடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப் பார்ப்புகள்.சென்னை நகருக்கே இத்தகைய நிலைமையெனில் மற்ற நகரங்களுக்கு…..?

Top