SHARES
ஒரு நாள் முதல்வர்|யார் எங்கு நடந்தது?
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் “முதல்வன்” திரைப்படத்தை அனைவரும் பார்த்திருப்போம்.”ச்ச…இப்படி ஒரு சி.எம் நமக்கு இருந்தால் எப்படியிருக்கும்” என்று அனைவரும் ஏங்கியதுண்டு.இவைகள்யெல்லாம் சினிமாவில் மட்டுமே நடக்கும் என்று நினைத்து நமக்கு நாமே மனதை சமாதானப்படுத்திக்கொண்டோம்.
ஆனால்,”ஒருநாள் முதல்வராக ஒருவர் பதவி ஏற்றுள்ளார் என்றால் உங்கலால் நம்பமுடிகிறதா? அதுவும் ஒரு கல்லூரி மனைவி என்றால்…?! என்ன நம்ப முடியவில்லையா? உண்மைதாங்க…..

சமீபத்தில் தேசிய பெண் குழந்தை தினம் கொண்டாடப்பட்டது.இந்நாளில் தான் உத்தரகண்ட் மாநிலத்தின் ஒரு நாள் முதல்வராக பதவி வகிக்கும் வாய்ப்பு ஷிருஷ்டி கோஸ்வாமி என்ற மாணவிக்கு நேற்று வழங்கப்பட்டது.

முதல்வர் திரிவேந்திர சிங்ராவத்
உத்தரகண்டில், முதல்வர் திரிவேந்திர சிங்ராவத் தலைமையிலான பா.ஜா.க ஆட்சி நடக்கிறது.நாடு முழுவதும் தேசிய பெண் குழந்தை தினம் கொண்டாட ப்பட்டது.இதனையொட்டி,பல மாநிலங்களில் பெண் குழந்தைகளை கவுரவிக்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.
அதே போல் தான் உத்தரகண்டில் நடந்துள்ளது.ஆம்..!

ஷிருஷ்டி கோஸ்வாமி
உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வார் மாவட்டத்தில், தவுலதாப்பூரை சேர்ந்தவர் ஷிருஷ்டி கோஸ்வாமி 20 வயதாகும் இவர், விவசாய கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.அம்மாநிலத்தின் சிறுவர்களுக்கான சட்டசபையில் முதல்வராக ஷிருஷ்டி இருந்து வருகிறார்.
இந்நிலையில்,தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக பணியாற்றும் வாய்ப்பை ஷிருஷ்டிக்கு முதல்வர் வழங் கினார்.இதையடுத்து, உத்தரகண்டின் ஒரு நாள் முதல்வராக ஷிருஷ்டி நேற்று பகல் 12.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை செயல்பட்டார்.மாநிலத்தின் தலைநகரான கெயிர்செயின் பகுதியில் உள்ள அலுவலகத்தில் அவர் முதல்வராக பணியாற்றினார்.

ஷிருஷ்டி-கோஸ்வாமி
அரசின் பல வளர்ச்சி திட்டங்களை ஷிருஷ்டி கோஸ்வாமி ஆய்வு செய்தார்.அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் தங்களின் திட்டங்கள் குறித்து “வீடியோ கான்பரன்ஸ் வழியாக, ஷிருஷ்டிக்கு விளக்கம் அளித்தனர்.
ஷிருஷ்டி கோஸ்வாமி கூறுகையில், இதனை என்னால் நம்பவே முடியவில்லை.மக்களின் நலனுக்காக இளைஞர்களால் சிறந்த நிர்வாகத்தை கொடுக்க முடியும்.என்பதனை நிரூபிக்கும் வகையில் என் பணி இருக்கும் என்றார்.
இதே போல் தமிழகத்துளையும் நடந்தால் என்ன?
மேலும் படிக்க: 1.) எம். என். நம்பியார்-ஓர் சகாப்தம்!
SHARES