வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது அடுத்த 24 மணி நேரத்திற்குள் புயலாக உருவாகி, காரைக்கால் – மகாபலிபுரம் இடையே நாளை மறுநாள் பிற்பகல் கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதன் காரணமாக, கடலோர மாவட்டங்களில் இன்று முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் மந்தநிலை- ( தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரைகளுக்கான சூறாவளி எச்சரிக்கை-மஞ்சள்) தென்மேற்கு மற்றும் அருகிலுள்ள தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட மந்தநிலை கடந்த 06 மணி நேரத்தில் 25 கி.மீ வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்தது, நவம்பர் 23 ஆம் தேதி 0830 மணிநேர ஐ.எஸ்.டி.° N மற்றும் தீர்க்கரேகை 84.2 ° E, புதுச்சேரியின் கிழக்கு-தென்கிழக்கில் சுமார் 550 கி.மீ மற்றும் சென்னையிலிருந்து தென்கிழக்கில் 590 கி.மீ. அடுத்த 24 மணி நேரத்தில் இது ஒரு சூறாவளி புயலாக தீவிரமடைய வாய்ப்புள்ளதுஇது வடமேற்கு நோக்கி நகர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரைகளை Karaikal மற்றும் மாமல்லபுரம் இடையே நவம்பர் 2020 பிற்பகல் கடும் ஒரு கடுமையான சூறாவளி புயலாக 100-110 கிமீ வேகத்தில் 120 கிமீ வேகத்தில் வீசும்’ என்று தெரிவிக்கப்பட்டது.
புயல் நேரத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் சில முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளது.
புயல் நேரத்தில் வெளியில் இருக்கும் மக்களின் கவனத்திற்கு:
பழுதடைந்த கட்டடங்களுக்கு நுழைய வேண்டாம்
மரங்கள், மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளுக்கு அருகில் நிற்க வேண்டாம்.
பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும்.
அருகில் உள்ள பாதுகாப்பு மையத்திலோ அல்லது பாதுகாப்பு கூட்டத்திலோ தங்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை விழிப்புடன் கவனிக்க வேண்டும்
புயல் நேரத்தில் வீட்டில் இருக்கும் மக்கள் கவனத்திற்கு:
பதற்றப்படாமல் இருத்தல்
ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைத்தல்
கயிறு, மெழுகுவர்த்தி , கைமின் விளக்கு (torch light), தீப்பெட்டி, மின்கலங்கள் ( batteries) மருத்துவ கட்டு (band aid), கத்தி , உலர்ந்த உணவு வகைகள் , குடிநீர், மருந்துகள் மற்றும் குளுகோஸ் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய அவசர உதவி பெட்டகத்தை தயாராக வைத்திருக்க வேண்டும்.
புயல் கரையை கடந்த பின்னர் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு அறிகுறிகள்:
அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்பே வெளியே செல்லவும்
அறுந்து விழுந்த மின்சார கம்பிகளின் மீது கவனம் தேவை
ஈரமாக இருப்பின் மின்சாதனங்களை உபயோகிக்க வேண்டாம்
சுற்றுப்புறத்திணை சுத்தமாக வைப்பதோடு கிருமிநாசினிகளை தெளிக்கவும்
மழைக் காலங்களில் பாம்பு மற்றும் பூச்சி கடிகளை தவிர்க்க கையில் தடியை எடுத்து செல்லவும்
காய்ச்சிய குடிநீரை பருகவும்
சுகாதாரமான உணவை உண்ணவும்
மீனவர்களுக்கான புயல் பாதுகாப்பு அறிகுறிகள்:
புயல் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால், தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய மேற்கு மத்திய மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தமிழக, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிக்கு நவம்பர் 23ம் தேதி முதல் 25-ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். ஏற்கனவே கடலுக்கு சென்றவர்கள் கரை திரும்பும்படியும், மேலே கூறிய கடல் பகுதிகளை தவிர்க்கும்படியும் அறிவுறுத்தப்படுகின்றனர். படகுகளுக்கு இடையே போதுமான இடைவெளி விட்டு படகுகளை பாதுகாப்பான இடத்தில் கட்டி வைக்கவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.இதனிடையே நிவர் புயல் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இன்று சென்னையில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.