மற்றவரின் வயிற்றை நிரப்பும் நிர்மல் ராஜ்| தொடர்ந்து சேவை செய்துவருகிறார்:

nirmal-cover

மற்றவரின் வயிற்றை நிரப்பும் நிர்மல் ராஜ்| தொடர்ந்து சேவை செய்துவருகிறார்:

உண்மையான சமூக சேவகர்கள் நம் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அவர்களை கண்டறிந்து வெளியுலகத்திற்கு அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறது சென்னையில்.காம்

nirmal-raj-tiruchy.

அந்தவகையில், திருச்சி காந்தலுர் கிராமத்தில் பிறந்து தற்பொழுது துவாக்குடியில் வசித்து வருபவர் நிர்மல் ராஜ் . இவர், தினமும் கோடை கொளுத்தும் வெயிலில், சாலையோரமாக பசியில் அவதிப்படும் ஏழை எளிய முதியவர்களுக்கு, தன்னார்வமாக உணவு  வழங்கிக் கொண்டிருக்கிறார்.

nirmal-raj-thiruchi

தமிழ்நாடு மற்றும் கேரள பகுதிகளில் பத்து வருடங்களாக சமூக ஆர்வலராக பணிபுரிந்து வருகிறார். குறிப்பாக சிறுவர்கள் மற்றும் முதியவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை வருடந்தோறும் செய்து கொண்டிருக்கின்றார்.

nirmal-thiruchi

இந்த  சேவையினை பாராட்டி, “அகில உலக விருது” மலேசியாவில் 2018ல் இவருக்கு  கிடைத்தது. மேலும் 2019ல் “தேசிய விருது”, “மாநில விருது” பெற்று இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

nirmal-raj

ஒவ்வொரு வருடமும் தீபாவளி, புத்தாண்டு போன்ற விழாக்களில் ஏழை குழந்தைகளுக்கு புது உடைகளும், இனிப்புகளும் மற்றும் கல்வி உதவி பொருட்களும் வழங்கி வருகின்றார்.

nirmal-raj-photo

குடும்ப வறுமை சூழலால் அவரது  பள்ளி பருவத்தின் போது “இனிகோ இல்ல” விடுதியில் தங்கி படித்து வந்திருக்கின்றார். தனக்கு எவ்வாறு குறைந்த தொகையில் வருடந்தோறும் விடுதியில் உணவு கிடைத்ததோ, அதேபோல் மற்றவருக்கும் நம்மால் இயன்றதை செய்ய வேண்டும்.

இல்லாதவர்களுக்கு என்ற கோட்பாட்டிற்கு இணங்க தனது பணியை செய்து வருகின்றார், நிர்மல் ராஜ்.

 

மேலும் படிக்க: 

தேர்தல்  ஹீரோஹிஸம் |மக்களை முட்டாள்ளாக்குகிறார்கள்:

மாடுகளின் கோட்டையாக மாறும் கோயம்பேடு மார்க்கெட்:

Follow us on :

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top