Main Menu

What’s New?

Connect With Us

நிகித்தா தோமர் என்ற கல்லூரி மாணவி சுட்டு கொலை : பதைபதைக்கும் சிசிடிவி காட்சி.

Read Carefully

SHARES

நிகித்தா தோமர் என்ற கல்லூரி மாணவி சுட்டு கொலை, பதைபதைக்கும் சிசிடிவி  காட்சி.  ஹரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள [ballabgarh] பல்லப்கர் நகரில் உள்ள கல்லூரியின் அருகில் அரங்கேறியுள்ளது இந்த கொடூரம். 21 வயது மதிப்புடைய நிகித்தா தோமர் என்ற மாணவி தன்னுடைய செமஸ்டர் தேர்வுக்காக விண்ணப்பிக்க தனது கல்லூரிக்கு வந்துள்ளார். வேலை முடிந்து வெளியில் வரும்போது, வெளியில் HYUNDAI  i10 காரில் காத்துக்கொண்டிருந்தனர் அந்த மர்ம நபர்கள். இது அறியாத மனைவி நிகித்தா தோமர்  தனது சக தோழியுடன் அந்த பக்கம் சென்றுள்ளார்.

அப்போது காரில் இருந்து வெளியே வந்த நபர் அதில் ஒரு மாணவியை தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் மாணவியை சுட்டு விட்டு காரில் தப்பி ஓடிவிட்டான். கார் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் ஒருவன் அவனுக்கு துணையாக இருந்து காரை ஓட்டி சென்றுள்ளான்.  அந்த மாணவி அவனிடம் இருந்து தப்பிக்க முயன்றார்.  உடன் இருந்த தோழியும் தடுக்க முயற்சித்தார் எதுவும் பலனளிக்காமல் மாணவி சுடுபட்டு அங்கையே சுருண்டு விழுந்துவிட்டார்.  உடன் இருந்த தோழி செய்வதறியாது திகைத்து நின்றார்.  இதன் CCTV காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்த சம்பவம் நடந்தது திங்கட்கிழமை [26.10.2020] மதியம் 3:45 மணியளவில். உடனடியாக அந்த மாணவியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.  

காவல்துறை விசாரித்ததில், துப்பாக்கி சூடு செய்தவன் பெயர் தவுபிக் என்பது தெரியவந்துள்ளது.  தவுபிக் மாணவி நிகித்தா தோமருக்கு 10 -ஆம் வகுப்பில் இருந்து தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது.  2017 -ஆம் ஆண்டு அந்த மாணவியை தவுபிக் கடத்தியும் சென்றுள்ளான். இதற்கு, நிகித்தா தோமர் குடும்பத்தார் காவல்துறையில் வழக்கு பதிவு செய்து FIR -ம் போட்டுள்ளனர். 

பிறகு, மாணவியின் எதிர்காலத்தை எண்ணி வழக்கை திரும்ப பெற்றுள்ளனர். ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அந்த மாணவிக்கு தவுபிக் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது. தற்போது இந்த கொலை சம்பவத்தையும் செய்துள்ளான் அந்த கொடூரன்.  

இன்று தவுபிக் போலீசாரிடம் சிக்கியுளான். உடன் இருந்த நபருக்கு போலீசார் வலைவிரித்துள்ளனர். வழக்கு பதிவு செய்து போலீசார் மேற்கொண்டு விசாரணையும் செய்து வருகின்றனர். 

 

Killed Nikita Tomar because she was about to marry someone else: Accused confesses to Faridabad murder - India News

இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கு உடனுக்குடன் தக்க நடவடிக்கை தர வேண்டும். அரபு நாடுகளில் கொடுக்கப்படும் தண்டனைகள், இது போல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அயோக்கியர்களுக்கு கொடுக்கப்படவேண்டும்.  கல்லூரிக்கு சென்று வீடு திரும்புவார் என்ற எதிர்பார்ப்புடன் இருந்த பெற்றோருக்கு இந்த சம்பவம் எவ்வாறு அதிர்ச்சியளித்திருக்கும். ஓடி ஒளிந்திருக்கும் மற்றுமொரு  குற்றவாளியை தேடி பிடித்து அவனுக்கும் சேர்த்து தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும். 

 

Top