கொரோனாவுக்கு அடுத்தடுத்து பலியாகும் பிரபலங்கள் : மோசமடையும் திரைத்துறையின் நிலை.

cinema industry affected in covid pandemic

முன்பெல்லாம் சினிமா பிரபலங்கள் புகை, மது , மாது போன்றவற்றால் இறந்து போவதுண்டு. ஆனால், தற்போது கொரோனா காரணமாக மரணித்து வருகிறார்கள். தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என முன்னணி பிரபலங்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு இறந்து வருகிறார்கள். இதற்கு என்ன காரணம்?

கொரோனா பரவல் காரணமாக சென்ற ஆண்டு மார்ச் கடைசி வரம் முதல் ஊரடங்கை பிறப்பித்தது மத்திய, மாநில அரசுகள். தொடர்ந்து ஆறு மாதம் வரையில் அந்த ஊரடங்கு நீடித்தது. மேலும், சில தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தை அறிவித்து வந்தது அரசு. இதில், பல துறைகள் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டன. அதில் முக்கியமான ஒன்று திரைத்துறை. திரைப்பட துறை பெரும் அடிவாங்கியது. கலைஞர்கள், படப்பிடிப்பு தளங்கள், படப்பிடிப்பு சாதனங்கள் வாடகைக்கு விடும் நிறுவனங்கள், திரையரங்குகள் போன்றவை நஷ்டமடைந்தன.

theatre closed lockdown tamilnadu

திரைத்துறையை சேர்ந்த பலரும் உண்ண உணவின்றி தவித்து வந்தனர். அந்த ஊரடங்கின் போதும் பல கலைஞர்கள் கொரோனவால் மறைந்தார்கள். இதன் காரணமாகவே திரைத்துறையின் மீதுள்ள கட்டுப்பாடுகளை அகற்றி, தளர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகளும் எழுந்தன.

2020-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திரைத்துறையின் மீதுள்ள கட்டுப்பாடுகளை அகற்றியது தமிழக அரசு.  இதனால்,மகிழ்ச்சி அடைந்தனர் திரைத்துறையினர். ஆனாலும், கொரோனா அச்சம் காரணமாக திரையரங்கில் வந்து படம் பார்க்க கூட்டம் குறைந்தது. இருப்பினும், OTT மூலம் படங்களை வெளியிட்டு தப்பித்து வந்தார்கள்.

2021 தேர்தலுக்கு பின் கொரோனா மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது. சென்றாண்டு ஏற்பட்ட ஊரடங்கின் பாதிப்பில் இருந்து மக்கள் மீளாத மீள முடியாமல் இருக்கின்றனர். இந்நிலையில், மீண்டும் ஊரடங்கு போடுவதா? அல்லது வேறேதும் நடவடிக்கைகள் எடுப்பதா? என்கின்ற குழப்பம் அரசுக்கு ஏற்பட்டது.

இருப்பினும், இம்மாதம் இரண்டாவது முறையாக திரையரங்குகளை மூட உத்தரவிட்டது தமிழக அரசு. ஆனால், படப்பிடிப்புகளை மட்டும் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்திக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக எங்கு இதற்கும் தடை விதிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர் படைப்பாளிகள். ஆனால், சில படப்பிடிப்புகளில் விதிமுறைகளை மீறி படப்பிடிப்புகள் நடத்தப்படுகின்றன. இதனால், திரைத்துறையினருக்கு கொரோனா பரவி வருகிறது. குறிப்பாக, 50 வயதிற்கு மேலாக இருக்கும் கலைஞர்களுக்கு தொற்று ஏற்பட்டு வருகிறது.

ஆகையால், படப்பிடிப்புக்கு அரசு தடை விதிக்க வேண்டும். தடை நீக்கம் வரையில் அவர்களுக்கு போதிய நிதி வழங்க வேண்டும்.

கலைஞர்களே! படைப்பாளிகளே! உங்களின் படைப்புகளை விட உங்களின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம்! நீங்கள் உருவாக்கும் படைப்புகளின் தேவைகளை விட உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் மிகவும் தேவையானவர்கள்!

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top