இந்தியா உட்பட உலக நாடுகளை மெல்ல மெல்ல கரையானை போல் கரைத்து வருகிறது இந்த கொடூர கொரோனா.இந்தியாவை பொருத்தவரை கடந்த மார்ச் மாதம் இறுதியில் கொரோனா தொடங்கியது.ஏப்ரல்,மே,ஜூன்,ஜூலையில் வேகமெடுத்த கொரோனா ஆகஸ்ட் மாதத்திற்கு பின் படிப்படியாக கொரோனாவின் வீரியம் கொரைய ஆரம்பித்தது.மேலும் அடுத்தாண்டு ஜனவரியில் தடுப்பூசி கிடைத்துவிடும் என்கின்ற தகவல்களும் வெளிவர,மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஆனால்,இங்கிலாந்தில் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறதாம்.இதானால்,இங்கிலாந்து அரசு மற்ற நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.மேலும்,இங்கிலாந்தில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதனால்,கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பல நாடுகளில் இருந்து வரும் விமானங்கள் அனைத்தும் இங்கிலாந்திற்கு வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்தில் பரவி வரும் புதிய கொரோனா வைரசை குறித்து விவாதிக்க மத்திய சுகாதார அமைச்சகம் ஏற்பாடு செய்திருக்கிறது.சுகாதார சேவைகள் டைரக்டர் ஜெனரல் தலைமையிலான,கூட்டு கண்காணிப்பு குழு இந்த கூட்டத்தை நடத்துக்கிறது.மேலும்,உலக சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதியும்,கூட்டு குழுவின் உறுப்பினருமான டாக்டர்.ரோடெ ரிக்கோ எச் ஓப்ரினும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார் என தெரிகிறது.