பா.ஜ.க -வின் அடுத்த திட்டம். NEW BANK POLICY. பா.ஜ.க -வின் ஆட்சிக்காலம் தொடங்கிய முதலே பல திட்டங்களை வகுத்தும், நடைமுறைப்படுத்தியும் வருகின்றனர். ஆனால், அவைகளில் பல அடித்தட்டு மக்களுக்கு பாதகமாக இருந்துள்ளது. உதாரணமாக, பணமதிப்பிழப்பு திட்டம், கடனுதவி திட்டம் போன்றவை. இப்போது, வங்கிகள் பெரும் சேவை கட்டணங்களை அதிகப்படுத்தும் வகையில் திட்டம் ஓன்றை வங்கிகளுக்கு வழங்க இருக்கிறது மத்திய அரசு.
இந்தியாவில் சில வங்கிகள், வாடிக்கையாளர்களின் வாங்கி கணக்கில் இருந்து பணத்தை பெறுவதற்கும், டெபாசிட் செய்வதற்கும் கட்டணம் வசூலிக்க தொடங்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்த பணப்பிடித்தத்தை பேங்க் ஆப் பரோடா வங்கி நவம்பர் 1 முதல் வசூலிக்க தொடங்கலாம் என தெரிவித்துள்ளது. பேங்க் ஆப் இந்தியா, பிஎன்பி, ஆக்ஸிஸ் வாங்கி மற்றும் சென்ட்ரல் வாங்கி போன்ற வங்கிகளும் இந்த கட்டணத்தை வசூலிக்கலாம் என செய்திகள் வெளிவந்துள்ளது.
அறிக்கையில், இந்த பண பரிவர்த்தனை கட்டணங்கள் சில நவம்பர் மாதம் 1 -ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவித்துள்ளது. ஒரு மாதத்தில் மொன்று முறை பணத்தை திரும்ப பெறுவது இலவசம். அப்படியென்றால், நமது வாங்கி கணக்குகளில் இருந்து நாம் ஒரு மாதத்திற்கு மூன்று முறை மட்டுமே இலவசமாக பணத்தை எடுக்க முடியும். அந்த வரம்பை மீறினால் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது மத்திய அரசு. அந்த கட்டணம் ரூ. 150 ஆக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நமது வாங்கி கணக்குகளில் பணத்தை டெபாசிட் செய்வதற்கும் நாம் கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு மாதத்திற்கு மூன்று முறைக்கு மேல் நாம் பணத்தை டெபாசிட் செய்தால் ரூ. 40 வசூலிக்கப்படும். இப்படியாக, நமது ஒவ்வொரு பரிவர்தனைகளுக்கும் நாம் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிக்கை வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பானது அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை. விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட வங்கிகள் அந்த கட்டணத்தை வசூலிக்குமா என நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஏற்கனவே இந்த மாதிரியான கட்டண வசூல் இருப்பதுதான். ஆனால், கட்டணத்தை உயர்த்தி பணபரிவர்த்தனைகளுக்கு ஏற்ப கட்டணம் வசூலிப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு மாதத்தில் ஏடிஎம் மையம் மூலம் பணம் எடுப்பவர்கள் அதிகம். அதற்கு வரம்புகள் அறிவித்து அதற்கேற்ப கட்டணம் வசூலிக்கபட்டது.
ஆனால், வங்கிகளின் இந்த கட்டண வசூல் இந்தியாவின் ஏழைகளின் பணத்தை சுரண்டும் செயலாக உள்ளது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் பல ஏழை குடும்பங்கள் பாதிக்கப்படும். வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.
Also Read: மோட்டார் வாகன சட்டம் 2019 | MOTOR VEHICLE ACT 2019.
Follow us on Facebook and Instagram: