நாராயணா…நாராயணா…என்று அலறும் நாராயணசாமி!
தமிழகத்தில் அரசியல் சூடு பிடிக்கிறதோ இல்லையோ, புதுச்சேரியில் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தற்போது நாராயணா….. நாராயணா….. என்று கதறி வருகிறார். அடுத்தடுத்து புதுச்சேரி அமைச்சர்களும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்து வருவதால், புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தற்போதுள்ள 14 எம்.எல்.ஏ.,க்களில் ஒருவர் ராஜினாமா செய்தாலும், நாராயணசாமியின் ராஜ்ஜியம், பரி போகிவிடும். இது பத்தாத குறைக்கு கவர்னர் கிரண் பேடியை பதவியிலிருந்து தூக்கப்பட்டு, தெலுங்கானா கவர்னர் தமிழிசைக்கு புதுச்சேரியையும், கூடுதலாக பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
என்னதான் நடக்குது புதுச்சேரியில…?

அமைச்சர் நமச்சிவாயம்
சீனியர் அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ., தீப்பாய்ந்தான் ஆகியோர் கடந்த மாதம் பதவியை ராஜினாமா செய்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜா., தேசியத்தலைவர் நட்டா, முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

மல்லாடி கிருஷ்ணாராவ்
அதேபோல புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்த மல்லாடி கிருஷ்ணாராவ் தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஜான் குமார் நேற்று காலை ராஜினாமா செய்தார். இதனால், கடும் அப்செட்டில் நாராயணசாமி உள்ளாராம். இதில் கடுப்பான புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி கூறுகையில்., இது திட்டமிட்டு பா.ஜ.க., செய்யும் சதி, பா.ஜ.க., பின்னணியில் இது நடந்துள்ளது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஜான் குமார்
ஒட்டுமொத்த அமைச்சரவையும் ராஜினாமா செய்து விட்டு, மக்களை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்றார். இதனால் கடும் கோபம் கொண்ட நாராயணசாமி, தனது தலைமையில் உள்ள அமைச்சர்களும், மீதமுள்ள எம்.எல்.ஏ.,க்களும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய போவதாகவும், கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதங்களை வழங்க உள்ளதாகவும் தகவல் பரவியது.
சட்டசபை வளாகத்தில் உள்ள அ.தி.மு.க., அலுவலகத்தில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தலைமையில், பா.ஜ.க-அ.தி.மு.க., நிர்வாகிகளும், எம்.எல்.ஏ.,க்களும் திடீர் ஆலோசனை நடத்தினர். 15 எம்.எல்.ஏ.,க்களில் தற்போது 10 ஆக சரிந்துவிட்டது. ஆனால், இன்னும் எங்களுக்கு பெரும்பான்மை உள்ளதாக நாராயணசாமி கூறுவது, வடிவேலு சொல்ற மாதிரி சின்னப்பிள்ளை தனமாக இருக்கிறது.
எல்லாம்… சரி… கிரண் பேடியை துணை நிலை கவர்னர் பொறுப்பிலிருந்து நீக்கி, ஜனாதிபதி ஏன் உத்தரவிட்டார்? என்பதுதான் புரியவில்லை. கிரண்பேடி கவர்னர் பொறுப்பேற்ற காலம் முதலே, பா.ஜ.க.,விற்கு ஆதரவாகவும், விசுவாசமாகவும் செயல்பட்டு வந்தார். இதனால் அடிக்கடி முதல்வர் நாராயணசாமிக்கும், கவர்னராக இருந்த கிரண் பேடிக்கும், முட்டல்களும் மோதல்களும் அரங்கேறின.
இருப்பினும், கிரனை தூக்கி அடிக்க என்ன காரணம்? தெலுங்கான கவர்னராக இருந்த தமிழிசை சௌந்தரராஜனை ஏன் புதுச்சேரிக்கும் கவர்னராக்க வேண்டும்? கவர்னரை மாற்றியது நாராயணசாமியை காப்பாற்றவா? அல்லது கவுக்கவா? என்கின்ற கேள்வியை முன்வைக்கிறது சென்னையில்.காம்.
மேலும் படிக்க: