Main Menu

What’s New?

Connect With Us

MUMBAI INDIANS அணி 5 -வது முறையாக கோப்பை வென்றது : ரோஹித் சர்மா அரைசதம்

Read Carefully

SHARES

MUMBAI INDIANS அணி 5 -வது முறையாக கோப்பை வென்றது : ரோஹித் சர்மா அரைசதம். கொரோனா பரவலின் காரணமாக இந்தாண்டு ஐ.பி.எல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவந்தது. இதில் எட்டு அணிகள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், நேற்று [10.11.2020] துபாயில் நடைபெற்ற ஐ.பி.எல் 2020 -க்கான இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றிபெற்றது. 

துபாயில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களம் இறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்கஸ் ஸ்டோனிஸ், டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். பிறகு, ஷிகர் தவான் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். ரஹானே 2 ரன்களில் வெளியேறினார். இந்நிலையில், டெல்லி அணி 25 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. பின்னர், களமிறங்கிய ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி இருவரும் அரைசதம் கடந்தனர். 

இறுதியாக, 20 ஓவர்களில் 156 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது டெல்லி அணி. 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது  மும்பை இந்தியன்ஸ். மும்பை அணி சார்பாக ரோஹித் (68), இஷான் கிஷன் (27), டி காக் (20), சூரியகுமார் யாதவ் (19), பொலார்ட் (9), ஹர்டிக் பாண்டியா (3), க்ருநாள் பாண்டியா (1). இறுதியாக, மும்பை அணி 18.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐந்தாவது முறையாக IPL கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி. 

முன்னதாக, PLAYOFF சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகளுக்குள் கடும் போட்டி நிலவியது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேபிட்டல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி, மும்பை இந்தியன்ஸ் அணிகள் PLAYOFF க்கு தகுதி பெற்றன. இதில், ஹைதெராபாத் அணியும், பெங்களூர் அணியும் தகுதி சுற்றில் வெளியேறிது. டெல்லி அணியும் மும்பை அணியும் இறுதி ஆட்டத்தில் போட்டியிட இருந்தன. இந்த சீசன் முழுக்கவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெல்லி அணி இம்முறை கோப்பை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. முதன் முறையாக இளைஞர் பட்டாளம் நிறைந்த டெல்லி அணி வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பை வென்றது சிறிய ஏமாற்றம்தான் என்றாலும் மும்பை இந்தியான்ஸ்க்கு ரசிகர் பட்டாளம் எக்கச்சக்கம் என்பதால் கோப்பை வென்றது முபை ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது.  

 

Top