கொரோனா மீண்டும் பரவ இதுதான் காரணம் : மும்பை விமான நிலையத்தில் மிகப்பெரிய ஊழல்.

மும்பை விமான நிலையத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது.  கொரோனாவின் இரண்டாம் அலை நாடு முழுவதும் வேகமெடுத்து வருகிறது. மும்பை, டெல்லி, சென்னை, புனே போன்ற நகரங்களில் உச்சத்தை அடைந்து வருகிறது கொரோனா. நிலைமையை சீர் செய்ய அந்தந்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

India Under Quarantine; Markets, Roads Deserted
MUMBAI, INDIA – MARCH 2021

ஒவ்வொரு நாளும் 1 லட்சத்தை தாண்டி வருகிறது கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை. குறிப்பாக, அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி அதிக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது இந்தியா. இதற்கான காரணத்தை பற்றி கண்டறிந்து வருகிறது இந்திய அரசு. இதன் காரணமாக, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இது ஒரு புறமிருக்க மும்பை விமான நிலையத்தில் மிகப்பெரிய ஊழல் ஒன்று நடந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளிடம் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அவர்கள் 7 நாள் வரை தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இந்த பயணிகளை கண்காணிப்பது விமான நிலையத்தில் உள்ள சிவிக் பணியாளர்களின் வேலை (CIVIC WORKERS).

வெளி நாடுகளில் இருந்து மும்பை வரும் பயணிகளை ஹோட்டல்களை தேர்வு செய்ய சொல்கிறார்கள். அவர்கள் தேர்வு செய்த பிறகு பேருந்தில் அந்த ஹோட்டலில் சென்று இறக்கி விட்டு வருகின்றனர். அப்படி இறக்கி விடும் பயணிகள் 7 நாள் வரை அங்கு இருக்க வேண்டும். ஆனால், அந்த பயணிகள் ரூபாய் 10,000 லஞ்சமாக கொடுத்து வெளியில் தப்பித்து சென்று விடுகின்றனர்.

mumbai airport scam

ஹோட்டலில் சென்று இறக்கி விட்டு பயணிகளை தனிமைபடுத்த செய்துவிட்டு திரும்பி விடுகிறது பேருந்து. அதற்கு மறுநாள் அதேபோல் பயணிகளை இறக்கி விட வரும் பேருந்துக்கு பின்னால் இனோவா (INNOVA CAR) ஒன்று வரும். முந்தைய நாள் அந்த ஹோட்டலுக்கு வந்த பயணிகளில் வெளியில் செல்ல விரும்பும் பயணிகள் அந்த காரில் ஏறி தப்பித்து கொள்ளலாம். இதற்கு கையூட்டாக ரூ.10,000 வாங்கப்படுகிறது என்று கூறுகின்றனர்.

mumbai airport

இந்த செய்தி இத்தனை நாட்கள் கழித்து தற்போது தான் வெளிவந்துள்ளது. மும்பையை சேர்ந்த MID – DAY என்னும் பத்திரிக்கையின் ரிப்போர்ட்டர்கள் ஏப்ரல் 1 -ஆம் தேதி ஒரு சோதனையை செய்துள்ளனர்.  அந்த சோதனையில் மும்பை விமான நிலைய சிவிக் பணியாளர்கள் முறைகேட்டில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. MID – DAY ரிப்போர்ட்டர்கள் விமான நிலையத்தில் பணிபுரியும் சிவிக் பணியாளர்களிடம் பெண் பயணி ஒருவர் வளைகுடா நாட்டில் இருந்து வருகிறார் என்று கூறியுள்ளனர். மேலும்,அவரை தனிமைப்படுத்துதலில் இருந்து விளக்கு அளிக்குமாறு கேட்டுள்ளனர். அதற்கு, பணியாளர்கள் படிவம் ஒன்றை நிரப்ப சொல்லியுள்ளனர். அதனை நிரப்பியபின் ஹோட்டலுக்கு செல்லும் பேருந்து பின்னால் இன்னோவா கார் ஒன்று வரும் அதில் ஏறி தப்பித்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். அதற்கு கையூட்டாக ரூபாய் 10,000 பெற்றுக்கொண்டனர்.

mumbai airport quarantine scam

இதனை, கேமராவிலும் பதிவு செய்து வெளியிட்டு உள்ளனர்  MID – DAY பத்திரிக்கையாளர்கள். தற்போது இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் தற்போது மார்ச் மாதத்தில் இருந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மீண்டும் நோய் பரவல் அதிகரிக்கத்தொடங்கியதற்கு இதுவே முக்கிய காரணம் என்று நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் நோய் பரவல் உச்சத்தை தொட்டு வருவது மிகப்பெரிய பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகள் மேல் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் நோய் பரவல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மீண்டும் நாள் ஒன்றுக்கு 7,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு வருகிறது. இதனை மிகவிரைவில் கட்டுப்படுத்துவதே அனைத்து மாநில அரசுகளின் கடமையாக இருக்கும். அதற்கு மக்களும், அதிகாரிகளும் ஒத்துழைக்க வேண்டும்.

 

மேலும் படிக்க:

 

பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்!

 

கொரோனா அபராத தொகை எங்கே செல்கிறது?|அதனை மக்களுக்கு கொடுங்க!

Follow us on :

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top