“NIVAR” : MOUNT ROAD ஐ சூறையாடிய நிவர் புயல் | மரங்கள், மின்கம்பங்கள் அகற்றும் பணிகள் தீவிரம் 

MOUNT ROAD NIVAR

NIVAR CYCLONE : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நேற்று “நிவர்” புயலாக வலுப்பெற்றுள்ளது.  நேற்று இரவு சென்னை – மாமல்லபுரம், காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில், நேற்று இரவு 11 : 00 மணியளவில் மரக்காணம் அருகே கரையை கடக்க தொடங்கியது. இரவு நிவர் புயல் அதிதீவிர புயலில் இருந்து வலுவிழந்து தீவிர புயலாக மாறி கரையை கடந்தது. 

MOUNT ROAD NIVAR

இதனால், காற்றின் வேகம் வெகுவாக குறைந்து காணப்பட்டது. சென்னையில், பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும் ஆங்காங்கே மரங்கள், மின்கம்பங்கள் விழுந்து கிடந்தன. இதனை அப்புறப்படுத்தும் பணி  தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிவர் புயல் எதிர்பார்த்ததை விட பாதிப்பு குறைவாக ஏற்பட்டது மகிழ்ச்சியளித்தாலும் புதுச்சேரி மாநிலத்தில் புயலின் கோரத்தாண்டவத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

NIVAR புயலால் சென்னையில் காற்றின் வேகம் குறைவு என்றாலும் மழை 8.9 செ.மீ அளவாக இருந்தது. அதேபோல, சென்னையில் பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. ஆங்காங்கே மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்துள்ளன. குறிப்பாக சென்னையின் முக்கிய சாலையான MOUNT ROAD  சாலையில் மரங்கள் வீழ்ந்துள்ளது. இதனை அப்புறப்படுத்தும் பணியில் பேரிடர் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

MOUNT ROAD NIVAR

மவுண்ட் ரோடு, ஆயிரம் விளக்கு பகுதியில் சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், மவுண்ட் ரோடு சாலையில் ஒரு பகுதியை BLOCK செய்து பணியை மேற்கொண்டு வருகின்றனர். 

 

Read Also : சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி இயக்கும் “என்றாவது ஒரு நாள்” : விதார்த் | ரம்யா நம்பீசன் 

Follow us on Facebook and Instagram:

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top