மோட்டார் வாகன சட்டம் 2019 | MOTOR VEHICLE ACT 2019.

மோட்டார் வாகன சட்டம் 2019.  மோட்டார் வாகன சட்டம்  இந்தியாவில், 1989 -ஆம் ஆண்டு சில திருத்தங்களுடன் கொண்டுவரப்பட்டது. பின்னர், 2017 -ஆம் ஆண்டு மோடி தலைமையிலான அரசு மாநிலங்களவையில் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றியது. 

 

அதன் பிறகு, கடந்த 2019 -ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்தியாவில் மோட்டார் வாகனச்  (திருத்த) சட்டம் செயல்படுத்தப்பட்டது.  இதில், பல போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராதம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

 
நிறைவேற்றப்பட்ட மசோதாவின் திருத்தங்களுள் சில பின்வருமாறு. 
 
1.) பிரிவு 181. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ. 5000 அபராதம் செலுத்த வேண்டும். இது முந்தைய அபராதமான ரூ. 500 -ல் இருந்து பாத்து மடங்கு அதிகமாகும். 
 
2.) பிரிவு 196. மோட்டார் வாகனத்திற்கு காப்பீடு (INSURANCE) இல்லாமல் ஓட்டினால் அபராதம் ரூ.2000 அல்லது 3 மாதம் சிறைத்தண்டனை. இரண்டாவது முறை சிக்கினால் ரூ. 4,000 அபராதமும், மூன்று மாதம் சிறைத்தண்டனையும்.  இதற்கு முந்தைய அபராதமாக ரூ.1000 -மும் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனையும் இருந்தது. 
 
3.) பிரிவு 182. ஓட்டுநர் தகுதியற்ற / காலாவதியான ஓட்டுநர் உரிமத்துடன் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படலாம்.  இதற்கு முந்தைய அபராதமாக ரூ.500 இருந்தது. 
 
4.) பிரிவு 185. குடிபோதையில் வாகனம் ஓட்டுவது கடுமையான குற்றமாகும். இந்த குற்றத்திற்கு பழைய அபராதமான ரூ.2000 -ல் இருந்து ரூ. 10,000 அல்லது 6 மாதம் சிறைத்தண்டனையாக  உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக சிக்கினால் ரூ.15,000 அபராதம் செலுத்த வேண்டும். மேலும், 2 ஆண்டு வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும். 
 
5.)பிரிவு 189. சாலைகளில், வாகன பந்தயம் அல்லது வாகனங்கள் வேகமாக ஓட்டுவது போன்ற குற்றத்திற்கு ரூ.5,000 அல்லது 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை. இரண்டாவது முறை குற்றம் செய்தால் ரூ. 10,000  அபராதம் அல்லது 1 வருடம் சிறைத்தண்டனை அளிக்கப்படும். இந்த குற்றத்திற்கு முன்பு ரூ. 500 அபராதமாக இருந்தது. 
 
 
6.) சமீபத்தில், போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் விதிக்கப்படும் அபராதத்தை E -CHELLAN மூலம் செலுத்தலாம். இதனை, PAYTM, IOB வாங்கி, அல்லது தபால் துறை மூலமாக செலுத்தலாம். 
 
 
 
 
 
 
  •  INDIAN MOTOR VEHICLE ACT
  •  MOTOR VAAGANA SATTAM
  •  MOTOR VEHICLE ACT
  •  MOTOR VEHICLE ACT 2019
  •  RTI Act
  •  VIZHTHEZHU MAKKALE
  •  மோட்டார் வாகன சட்டம்
  •  மோட்டார் வாகன சட்டம் 2019
 
 
 
 
 
 
 
 
 
 
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp

Also Read

Scroll to Top