Main Menu

What’s New?

Connect With Us

விஜய்சேதுபதிக்கு அமைச்சர் கண்டனம்|பாண்டியராஜன்|முத்தையா முரளிதரன்|

Read Carefully

SHARES

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்காமல் இருப்பது நல்லது என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று,800 என்கின்ற திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடித்து வருகிறார்.800 திரைப்படதில் விஜய்சேதுபதி நடிக்க திரையுலகினர் உட்பட அனைத்து தரப்பு மக்களும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன.இப்படத்திற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்புகள்?“எந்த ஆண்டுகளிலும் இல்லாத மகிழ்ச்சி,எனக்கு இந்த ஆண்டுகளில் உள்ளது என முத்தையா முரளிதரன் 2009ல் கூறினார்.

மேலும் அவரது பெரும்பாலும் கருத்துக்கள் இலங்கை தமிழர்களை இழிவுப்படுத்துவதாகவே இருக்கும்.இதனாலேயே முத்தையாவை எதிர்க்கின்றனர்.இதனை முற்றிலும் மறுக்கும் முத்தையா,இலங்கையில் போர் நிறைவடைந்ததால் கடந்த 10 ஆண்டுகளாக இரு பக்கமும் உயிரிழப்புகள் ஏதும் இல்லாமல் இருப்பதை மனதில் வைத்தே 2009ஆம் ஆண்டு எனது வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் என்கின்ற கருத்தை தெரிவித்தேன்.ஒரு போதும் நான் அப்பாவி மக்களின் படுகொலைகளை ஆதரிக்கவும் இல்லை.ஆதரிக்கவும் மாட்டேன் என கூறினார்.

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் அடையாளமே தமிழ் எதிர்ப்பு அடையாளமாக உருவாக்கப்படுத்தப்பட்டுவிட்டது.அவரும் அது போல ஒரு நிலைப்பாட்டை எடுத்தார்.அவரைப்போற்றி படமே எடுக்க கூடாது என்பது என் கருத்து.தமிழ் எதிர்ப்பாளர் என்ற பெயர் பெற்ற ஒருவர் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி,முத்தையா முரளிதரன் வாழ்க்கை திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்காமல் இருப்பது அவரது புகழுக்கு நல்லது என அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.இப்படி பொது மக்கள்,சினிமா பிரபலங்கள்,அரசியல் பிரமுகர்கள் என யார் வேண்டுமானாலும் எதிர்ப்பை தெரிவிக்கட்டும் நான் 800 திரைப்படத்தில் நடித்ததே தீர்வேன் என்று ஒற்றை காலில் நிற்கிறார் விஜய் சேதுபதி….

Top