கொரோனா பெருந்தொற்று காலத்தில், கேரளாவிற்கு விஜயம் செய்த மாவேலி மன்னன் மூலம் முகக்கவச உரையின் முக்கியத்துவத்தை சித்தரிக்கும் அனிமேஷன் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காணவரும் மாவேலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாளை திருவோணத் திருநாளாகவும், புத்தாண்டாகவும் கேரளா மக்கள் கொண்டாடுகின்றனர்.
சுவி விஜய் தயாரித்த இந்த அனிமேஷன் வீடியோவில், ‘முகக்கவசம் அணியாமல் பானை வயிற்று பேரரசர், கேரளாவிற்கு விஜயம் செய்வது போலவும், அவருக்கு தொற்று ஏற்பட்டு ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைக்கப்படுவது போலவும்’ காட்டப்படுகிறது.
ஒவ்வொரு திருவோணத் திருநாள் அன்று மகாபலி மன்னன் பாதாள உலகிலிருந்து பூலோகத்திற்கு வருவதோடு, தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாகக் கேரள மக்கள் நம்புகிறார்கள்.