முகம்  பளபளக்க இந்த எண்ணெய் மசாஜ் செய்யுங்கள்: 

யாருக்கு தான் அழகான

 முகம்  பளபளக்க இந்த எண்ணெய் மசாஜ் செய்யுங்கள்: 

oils for skin glow in tamil: முகம் பளபளக்க ராத்திரி தூங்கப் போகும்முன்  என்னென்ன எண்ணெய்களை அப்ளை செய்யலாம்... - best homemade face oils you should  try at night in tamil | Samayam Tamil

யாருக்கு தான் அழகான, பிரகாசமான சருமம் வேண்டுமென்ற ஆசை இருக்காது. சருமத்தின் பொலிவை அதிகரிக்க நம்மில் பலர் கடைகளில் விற்கப்படும் பல அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தியிருப்போம். ஆனால் கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்கள், சருமத்திற்கு தற்காலிக பொலிவைக் கொடுக்குமே தவிர, சரும செல்களின் ஆரோக்கியத்தை மெதுவாக அழத்துக் கொண்டிருக்கும். அதனால் தான் தினமும் மேக்கப் போடுபவர்களை, ஒருநாள் மேக்கப் போடாமல் பார்த்தால், அவர்களது சருமம் சுருக்கத்துடனும், பொலிவின்றியும் காணப்படுகிறது. அதுவே இயற்கைப் பொருட்களால் சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுத்து வந்தால், சரும செல்கள் ஆரோக்கியமாகவும், சருமம் எப்போதும் பிரகாசமாகவும் காணப்படும்.

உங்கள் சருமத்துக்கு பாதாம் எண்ணெயின் பயன்கள் | பி பியூட்டிஃபுல் | Be  Beautiful India

 பாதாம் எண்ணெய் மசாஜ்:

 இரவு தூங்கும் முன் சோப்பு அல்லது ஃபேஷ் வாஷ் பயன்படுத்தி முகத்தில் உள்ள அழுக்கை நீக்கிய பின், ரோஸ் வாட்டர் பயன்படுத்தி முகத்தை துடைத்து, அதன் பின் சில துளிகள் பாதாம் எண்ணெயை முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி இரவு தூங்கும் முன் தினமும் செய்து வந்தால், பொலிவிழந்து இருக்கும் முகம் பொலிவு பெற்று அழகாக காணப்படும்.

தேங்காய் எண்ணெயின் மருத்துவ குணங்கள்!!

 தேங்காய் எண்ணெய்:

 நம் அனைவரது வீட்டிலும் பொதுவாக பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெய் தலைமுடிக்கு மட்டும் நல்லதல்ல, சரும பொலிவை அதிகரிக்கும் திறனையும் கொண்டது. எனவே சருமத்திற்கு கெமிக்கல் கலந்த மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவதற்கு பதிலாக, தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தி சருமத்தை மசாஜ் செய்யுங்கள். இது சரும பொலிவை அதிகரிக்க உதவுவதோடு, அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும்.

வீட்டிலேயே பால் மற்றும் பாதாம் பேஸ் பேக் எப்படி செய்வது? - lifeberrys.com  Tamil இந்தி

 பால் ஃபேஸ் பேக்:

 காய்ச்சாத பச்சை பால் சருமத்தில் மாயங்களை ஏற்படுத்தும். குறிப்பாக இது சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும். எனவே நீங்கள் உங்கள் சரும நிறத்தை அதிகரிக்க நினைத்தால், இரவு தூங்கும் முன் முகத்தை கழுவிய பின்பு, பச்சை பாலை முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, பின் மறுநாள் காலையில் முகத்தைக் கழுவுங்கள். இதனால் உங்கள் முகம் பொலிவோடு பளிச்சென்று காணப்படும்.

 

மேலும் படிக்க: 

மீண்டும் வரப்போகுது புதிய தலைமை செயலகம்?

Follow us on :

CHENNAIYIL FACEBOOK | CHENNAIYIL INSTAGRAM | TWITTER CHENNAIYIL

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top