என்னது இந்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் வருகிறதா? : இயக்குனர் அளித்த சூப்பர் தகவல்.

மரகதநாணயம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக அதன் இயக்குனர் அறிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் திரில்லர் காமெடி ஜானர் படங்கள் வெகுவாக ரசிகர்களை கவர்ந்து வந்தன. அந்தவகையில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான படம் “மரகதநாணயம்”. ஆதி, நிக்கி கல்ராணி, முனீஸ்காந்த், அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். காமெடி கலந்த வித்தியாசமான கதைக்களத்தை கொண்டது இப்படம். ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்திருந்தது.
அறிமுக இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கியிருந்தார். இவர் ராட்சசன் படம் மூலம் பிரபலமான இயக்குனர் ராம்குமார் மற்றும் “இன்று நேற்று நாளை” படத்தின் இயக்குனர் ரவிக்குமார் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். முதல் படம் மூலமே ஏ.ஆர்.கே.சரவணன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்தார். மரகதநாணயம் படம் வெளியாகி செம ஹிட் அடித்தது.
இப்படம் வெளியானதிலிருந்தே ரசிகர்கள் இதன் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் என கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் ரசிகர்களின் அந்த கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. ஆம், அதன் இயக்குனர் தற்போது அதுபற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் “மரகதநாணயம் 2-வின் கதைக்கருவை தயாரிப்பாளார் டில்லிபாபு சாரிடம் கூறியுள்ளேன். அதற்கு முன்பாக சத்யஜோதி நிறுவனத்துடன் ஒரு படத்தை துவங்க உள்ளேன். இவற்றையெல்லாம் விட கொரோனாவிலிருந்து தமிழகம் விரைவில் மீண்டெழ வேண்டும் என்பதே என் பிரார்த்தனை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதன்மூலம், விரைவில் “Maragadhanaanayam” படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக இன்னொரு படத்தை இயக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp

Also Read

Scroll to Top