இந்தியன் 2 படத்தின் தாமதத்திற்கு லைக்கா தான் காரணம் : இயக்குனர் ஷங்கர் மனு.

இந்தியன் 2 - Indian 2

இந்தியன் 2 படத்தின் தாமதத்திற்கு தயாரிப்பு நிறுவனமான லைக்காவே காரணம் என்று அதன் இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. கமல் ஹாசன்,காஜால் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா,ரகுல் ப்ரீத் சிங், விவேக் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இந்நிலையில், படப்பிடிப்பில் நடந்த கிரேன் விபத்தால் படபிடிப்பு தடைபட்டது. மேலும், ஊரடங்கு மற்றும் கமலின் அரசியல் பிரவேசம் போன்றவைகளால் படபிடிப்பு நின்றுபோனது.

இந்நிலையில், ஷங்கர் தனது அடுத்த படத்தின் பணிகளை தொடங்கினார். இதனால், ஆத்திரமடைந்த லைக்கா நிறுவனம் ஷங்கர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்தியன் 2 -வை முடித்துக் கொடுக்காமல் ஷங்கர் வேறு படங்களில் பணிபுரிய கூடாது என வழக்கு தொடர்ந்தது. அதற்கு ஷங்கர் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஷங்கர் கூறியிருப்பதாவது, “படத்தின் தாமதத்திற்கு லைக்கா நிறுவனமே காரணம்” என்று தெரிவித்துள்ளார். மேலும், பல உண்மைகளை மறைத்து இந்த வழக்கை லைக்கா நிறுவனம் தொடர்ந்திருப்பதாக கூறியுள்ளார்.

பட்ஜெட் செலவை 270 கோடி ரூபாயில் இருந்து 250 கோடியாக குறைத்த பின்பும் படப்பிடிப்பின் வேலைகளை தாமதமாக தொடங்கியது லைக்கா. மேலும், அரங்குகள் அமைத்து தருவது, நிதி ஒதுக்கீடு போன்றவைகளில் தாமதம் ஏற்படுதியாதாக ஷங்கர் தெரிவித்துள்ளார். மேலும், கமலின் மேக் அப் அலர்ஜி, படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற கிரேன் விபத்து போன்றவைகளும் தாமதத்திற்கு காரணம் என தெரிவித்துள்ளார். லைக்கா நிறுவனம் தாக்கல் செய்த இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று ஷங்கர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் வழக்கை ஜூன் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

80 சதவீத படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் படத்தை கைவிடும் வாய்ப்பு  குறைவு. ஆகையால், தயாரிப்பு நிறுவனமான லைக்காவும், ஷங்கரும் சுமுகமாக பேசி இந்த வழக்கை முடித்தால் படம் விரைவில் வெளிவர வாய்ப்புள்ளது. அல்லது கமல்ஹாசன் இந்த பிரச்சனையில் தலையிட்டு நல்ல தீர்வை காணவேண்டும்.

 

மேலும் படிக்க:

பிரபல OTT -யில் வெளியாகும் கர்ணன் – தனுஷ் ரசிகர்கள் குஷி.

 

 

 

 

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top